பக்கம்:புது வெளிச்சம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“ஒரு சிறிய வார்த்தை நீர் எதெது கற்றுள்ளிரோ அதெல்லாம் வெறும் பெயர்கள்தாம். ஆம் வெறும் பெயர்கள்தாம்' என்று கூறும் இந்த வேத, தர்ம சாஸ்திரங்களைத்தான் சிருங்கேரி ஜகத்குரு பூரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் கூறும் வேத தர்ம சாஸ்திரங்கள் என்பதை தமிழ் மக்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது. ஏனெனில் இவைகள்தான், நமது சமத்துவ சகோதரத்துவ சுதந்திரத்தின் மகா கொடிய விலங்குகள். இதிலிருந்து விடுபடாதவகையில் நாம் மீட்சியடைய மாட்டோம் என்று கூறிவிட்டு இனி எழுத எடுத்துக்கொண்ட விசயத்துக்கு வருகிறேன். அதன் பெயர் ஜோதிஸம்.

நான்கு வேதங்களின் அங்கங்களாகவுள்ள வியாகரணம், சிட்சை, நிருத்தம், சந்தஸ், கல்பம், ஜோதிஸம் எனும் ஆறும் நம்மை பிடித்து பீனிக்கிற பீடைகள். இவற்றில் கடைசிப் பீடைதான் இந்தச் ஜோதிசம். மகா கொடிய மலைப் பாம்பின் வாயில் சிக்குண்ட மான்குட்டிபோல் இந்த ஜோதிசத்திடம் நாம் மாட்டிக் கொண்டோம், அல்லது மாட்டப்பட்டுள்ளோம் என்பது அறிவு பூர்ணமான உண்மை.

சூரியன், சந்திரன் இரண்டும் நாமெல்லாரும் அறிந்த ஜடப்பொருள்கள் புதன், சுக்கிரன் , செவ்வாய், வியாழன், சனி வானில் துாரத்தில் உள்ள கிரகங்கள். ராகு, கேது இரண்டும் பெயரளவில் உள்ளவைகள். எல்லாமே ஜடப்பொருள்கள்தாம்.

உலகிலுள்ள எல்லா மக்களையும் விட்டுவிட்டு இந்து மதத்தினரான நம்மை மட்டும் பிடித்து ஆட்டிப் படைக்கும் சக்தி இவைகளுக்கு எங்கிருந்து வந்தது?

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கர்கள் விண்வெளிக்குச் சென்று இதே சந்திரன் மேல் நின்று, காரி உமிழ்ந்து மேலும் அசுத்தப்படுத்திவிட்டு அந்த மண்ணையும் எடுத்துக் கொண்டு வந்தது உலக மக்கள் மறந்துவிடவில்லை.

ஒவ்வொரு திருமணமும் ஜோதிசம் பார்த்து பஞ்சாங்கம் பார்த்து முறைப்படி புரோகிதரே நடத்தி வைத்தவைகளில் பத்துக்கு ஐந்து விழுக்காடு 3, 4 மாதங்கள் முடியும் முன் அமங்கலமாகியோ

110 <

கவிஞர் வெள்ளியங்காட்டான்