பக்கம்:புது வெளிச்சம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணெண்ணைக்கு காதியாகியோ முடிந்து மூழ்கிப்போவதை நாம் இன்று நேரிலும் பத்திரிகை வாயிலாகவும் காண முடிகிறது.

ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப்படைக்கும் வல்லமை இந்த ஜடப்பொருளுக்கு இருப்பதுண்மையாயின் அது எல்லா நாட்டவர்க்கும் பொதுவாகவன்றோ இருக்கவேண்டும். இந்த அவலங்களில்லாது இன்றும் எத்தனையோ நாடுகள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் மக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதுவும் கண் கூடுதானே.

'உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந் தானுள்ளிய துள்ளப் பெறின்' எனுங் குறளையும் 'தன்னை அறியாது தானே கெடுகின்றான். தன்னையறியத் தனக்கொரு கேடில்லை' எனும் திருமந்திரத்தையும் நம்பி நடந்தால் இந்த கிரகப் பொய்கள் பெட்டிப்பாம்புகளாகி அடங்கிவிடுகிறது என்று என்னைப் போன்றுள்ள அனைவரும் அறிவர். ஆனால் பகுத்தறிவில்லாத பாமர மக்கள் ஜோதிட மூடர்களின் போசகர்களாகி நம்பி நடந்து இன்று படும் துன்பங்களை தொகுத்துக் கூற ஒரு எண் கிடையாது என்று கருத வேண்டியுள்ளது.

ஜோதிசத்தில் நம்பிக்கையிருந்திருந்தால் திருவள்ளுவரோ, திருமூலரோ மனித மேன்மைக்குரிய பாடல்களைப் பாடி இருப்பார்களா? உபநிசத்துக்கள்தான் உண்டாயிருக்குமா? ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிவிலா ஊக்கமுடையானுழை' எனும் குறட்பா தோன்றியிருக்குமா? இவ்வாறு மேலும் நாம் தர்க்க ரீதியாக அலசி ஆராய்ந்தால் இந்த ஜோதிசம் பழங்கால ஆரியர்கள் பாமர மக்களிடம் பறித்துத் தின்பதற்காகச் செய்ததென்று உறுதியாகக் கூறலாம். இதில் துளி ஐயமும் யாருக்கும் வேண்டியது இல்லை. அளவற்ற ஆதாரங்கள் எண்ண எண்ண என் உள்ளத்தில் உதித்துக் கொண்டே உள்ளது.

தர்க்க ரீதியாக நான் எடுத்துக் காட்டும் ஆதாரங்கள் சரியல்ல எனின் விட்டுத் தள்ளுங்கள். ஆம். தமிழ் வல்லுநர்கள் மறுக்கவே முடியாத ஆதாரங்களும் வேண்டிய அளவு என்னால் எடுத்துக்காட்ட முடியும். ஜோதிசத்தைக் கூடாதென மறுத்து ஒதுக்கியவர் ஆதிகாலாடி சங்கராச்சாரி என்றால் நீங்கள் முகம்

புது வெளிச்சம்

111