பக்கம்:புது வெளிச்சம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருக்கும் என்று நமது ஜோதிடர்கள் ' டாம் 'போட்டு எவ்வளவு பயங்கரத்தையூட்டினர் என்பதை எண்ணிப்பாருங்கள். அவர்கள் ஊட்டிய பயங்கரம் என்ன ஆயிற்று? ஒன்றுமே ஆகவில்லை என்பதை நாமனைவரும் கண்டிருக்கிறோம்.

இத்துடன் இந்தச் ஜோதிடர்கள் நின்றார்களா? நாம் சொன்னது பொய்யாய்விட்டது என்று கூச்சம் அல்லது வெட்கமாவது இருந்ததா? எதுவும் கிடையாத சோற்றுப் பிண்டங்கள்தான் இவர்களனைவரும் என்பது நமக்குப் புரிகிறதல்லவா?

இஃதொன்றுடன் இவர்கள் நின்றுவிடவில்லை, மீண்டும் 1982ஆம் ஆண்டும் முரசு கொட்டினர் 'உலகம் அழிந்து விடப் போகிறது; கிரகங்கள் நம்மைச்சர்வ நாசம் விளைக்க இந்த நாளைத் தேர்ந்தெடுத்துள்ளதை நாங்கள் அறிந்து கூறுகிறோம்'. என்று.

இந்தச் சுயநல மாமேதைகள் புலி வருகிறது புலி வருகிறது என்று போட்ட கூக்கூரல் வீணாகும் என்பது அவர்கள் அறிந்தே இருந்தனர். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் உலகத்திற்கு எந்த ஒரு கெடுதலும் ஏற்படாமல், தாங்களே மிகவும் முயன்று முறையாகப் பிரார்த்தனைகள், ஜபங்கள், உருவ வழிபாடுகள், யாகங்கள் என மக்களைக் கொண்டு நடத்திவைத்து எல்லா அதிஷ்டங்களும் நீக்கிவிட்டதாகவும் வெற்றி முரசு கொள்ளச் செய்தனர்.

1980 ஜனவரி மாதம் நடந்த லோக் சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதா கட்சியைப் பற்றி மகத்தான எதிர்கால பலாபலன்களைச் சொல்லாமல் இந்த வெட்கமற்ற ஜோதிடர்களால் சும்மா இருக்க முடியவில்லை.

"ஜனதா சர்க்கார் மேலும் அமோகமாக உறுதிநிலை பெற்று நாட்டை முன்னேற்றி மக்கள் நலனை முழுமையாக்குவதுவுமன்றி உலகம் காணாத புகழுக்கும் உரியதாகும்" என்றெல்லாம் தவளைக் கூச்சலிட இவர்கள் தவறவே இல்லை; ஆனால், இவர்கள் கூறியது அனைத்தும் பொய்யாகி ஜனதா சர்க்கார் குறைப்பிரசவமாகிப் போனதை உலகமே கண்டது என்று நான் நாட்டு மக்களுக்கு நினைப்பூட்டுகிறேன்.

புது வெளிச்சம்

113