பக்கம்:புது வெளிச்சம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சத்தியத்தையும் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கவில்லை. பஞ்சாங்கம் பகவர்வதனைத்தும் சுத்த சுத்தமான பச்சைப் பொய்கள் என்பதற்கு என்னிடம் தக்க சான்றுகள் உள்ளன.

'சாத்திரம் பொய்யென்றால் கிரகணத்தைப் பார்' என்ற ஒரு பழமொழி மட்டும் பஞ்சாங்கம் பகர்வது மெய்யென்று கொள்ளப் போதுமானதல்ல; சித்திரை மாதத்துக்குப் பின்னால் வருவது வைகாசி மாதம் எனச் சொல்வது சாத்திரமாகாது. நாளைக் கொண்டும் கோளைக் கொண்டும் வானத்தில் நிகழும் மாற்றங்களை மட்டும் சொல்லக் கூடுமன்றி அதை மனிதனோடு இணைத்து முடி போடல் மகாபாதகம் என்று நான் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சாணக்கியனது காலம் கி.மு. 4ம் நூற்றாண்டு எனப்படுகிறது. சாணக்கியன் செய்த அர்த்தசாஸ்திரம் காலத்தைப் பற்றிய அளவுப் பெயர்கள் உள்ளவிதம் இது. த்ருடி, லவ, நிமிக காங்டா, கலா, நாழிகை, முகூர்த்தம், காலை, மாலை, பகல், இரவு, பக்சம், மாதம், ருது, அயனம், வருடம், யுகம் மேலும் கொஞ்சம் விவரம்.

நிமிசத்தின் நாளில் ஒரு பாகம் த்ருடி, இரண்டு த்ருடி ஒரு லவ இரண்டு லவ ஒரு நிமிசம், ஐந்து நிமிசம் ஒரு காஸ்டா முப்பது காஸ்டா ஒரு கலா நாற்பது கலா ஒரு நாழிகை.

இவற்றில் நாம் கவனிக்க வேண்டியது கிழமைகள் இருக்கவில்லை; கிழமைகளுக்குப் பெயர்களும் இடப்படாததைக் காண்கிறோம். ஏழு நாள் ஒரு வாரம் என்ற விபரமும் கிடையாது. ஒரு நாளுக்கு இருபத்தி நான்குமணி நேரம் என்பதுவுமில்லை. இதுவுமன்றி அந்தக் காலத்தில் சந்திரனைக்கொண்டு மாதத்தையும், அயனத்தைக் கொண்டு வருடத்தையும் நிர்ணயிக்க வேண்டியிருந்தது. சந்திரனைக்கொண்டு வருடத்தை அளந்தால் 354 ( = 295 x 12) நாட்களே அடங்குவதாயிருந்தன. இந்தக் குறைபாட்டை 30 மாதங்களுக்கு ஒருமாதத்தை 13 மாதங்களுள்ள வருடமாக்கி குறையை நிறைவுசெய்து கொண்டு வர நேரிட்டது. எதற்காக இதைச் சொல்ல நேரிட்டது எனின் சாணக்யன் காலம் வரையிலும் சந்திரன் சூரியன் தவிர, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எனும் கிரகங்கள் இருப்பது இவர்கள் அறியவில்லை. எனவே

புது வெளிச்சம்

117