பக்கம்:புது வெளிச்சம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜோதிட சாத்திரம் என்ற பயங்கரமான பீடையும், பஞ்சாங்கம் என்ற மகா பயங்கரமான பிணியும் நாட்டில் இருக்கவில்லை என்பது நிருபணம் செய்து கொள்வதற்காகவேதான்

கிரகங்களே இன்னும் இல்லை என்று ஆகும்போது இருபத்தியேழு நச்சத்திரங்களும் இருந்திருக்காது. அமிர்த யோகம், சித்தயோகம், மரணயோகம்,கரிநாள், தனநாள்-இவைகளெல்லாம் கூடச் சாணக்யன் காலத்தில் இருக்கவே இல்லை. மேச, ரிசப ராசிகளும் இல்லவே இல்லை என்றும் நாம் சொல்லலாம். பிரபவ விபவ, சுக்கில என்று வருடங்களுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டிருக்காது என்றும் கூட நாம் நிச்சயம் செய்து கொள்ளலாம். எனினும் அமாவாசையிலிருந்து, பிரதமை, துதியை, திரிதியை எனும் திதிகள் மட்டும் இருந்தன. இந்தத் திதிகளில் எதேதோ நல்லது கெட்டது அடங்கியிருப்பதாக இன்று மக்கள் பொய் நம்பிக்கை வைத்துக் கொண்டுள்ளனர். இது அறியாமையின் பாற்பட்டது. இந்தத் திதிகளின் பொருள் அமாவாசை அல்லது பெளர்ணமி கழிந்த முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள், நான்காம் நாள் என்பதை தவிர்த்து வேறெதுவுமில்லை. சந்திரன், சூரியன் தவிர வேறு கிரகங்கள் இல்லாதபோது நவகிரகங்கள் பித்தலாட்டமும் இல்லை என்ற கூறலாம்.

பெயரிடப்படாத நாள்களில், திதிகள் எண்ணின் பெயர்களாயிருக்கையில் நட்சத்திரம், யோகம் கரணம் என்று மூன்றும் கூட்டிப் பஞ்சாங்கம் எனப் பெயர் சூட்டி நம்மை இந்து மதத்தினர் என்று பெயரிட்டு மந்தையாக்கித் தம் மனம் போல் ஆளச் செய்ய பின்னிய சூழ்ச்சி வலைகளில் இதுவும் ஒன்று என்று கொஞ்சம் குறிப்பிடுகிறேன்.

கி.மு. எட்டாம் நூற்றாண்டில் பாபிலோனியாவில் இருந்த காஸ்பீயன் எனும் வானசாஸ்திரிதான் ஏழு நாட்கள் கொண்ட வாரத்தையும், இருபத்திநான்கு மணிக் கூறுகள் கொண்ட தினத்தையும் சிந்தித்து வெளிப்படுத்திய முதல் மனிதன். பட்சார்த்தம் 7 ( = 14 / 2 ) தினங்கள் ஆகியிருந்த காரணத்தால் ஆகாசத்திலிருந்த ஏழு ஒளி கிரகங்கள் வெகு பொருத்தமாகவே அமைந்து போயிற்று.

118

கவிஞர் வெள்ளியங்காட்டான்