பக்கம்:புது வெளிச்சம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரகங்களுக்கும் நாட்களுக்கும் எந்த ஒரு தெய்வீகச் சம்பந்தமுமில்லை. சூரியன் உதித்துப் பகலாக்குகிறான். சந்திரன் இரவில் வானில் தோன்றும் போது நிலவு காணுகிறது. எல்லா மக்களும் பொதுவாக இவற்றை அனுபவிக்கிறார்கள். தனிதனியாகச் சோதிடர்கள் சொல்வதுபோல் இந்தக் கிரகங்களோ நாட்களோ யாரையும் எதுவும் செய்வதில்லை. மக்கள் வாழ்க்கைக்கும், நாள் கோள்களுக்கும் உள்ள தொடர்பு பொதுவானது. நல்ல நேரமும் கிடையாது. நல்ல நாளும் கிடையாது. அதுபோன்றே கெட்ட நேரமும் கெட்ட நாளும் கிடையாது என்பது இதிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

மக்களின் பல்வேறு அலுவல்களின் நிமித்தம் கொடுக்கல், வாங்கல், உழைத்தல், ஒய்தல், உண்ணல், உறங்கல் முதலிய அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அவசியம் வேண்டிய காலக் குறிப்புகளுக்க நாள், வாரம், மாதம், வருடங்கள் தேவை மட்டுமேயன்றி மக்களை, ஆளும் உரிமை இந்த நாட்கள் கோட்களுக்கு இருக்கவே இல்லை. உள்ளம் சுத்தமில்லாத, உழைத்துண்ண உளங்கொளாத இந்தச் சுரவர்கத்தினரில் பராசரன், ஜைமிலி, வராகமிகிலர் போன்றவர்கள் பஞ்சாங்கமென்ற படு பாதகம் மக்களை அநியாயமாக இதனாலும் அடிமை கொண்டனர் என்று என்னைச் சொல்லவே வைத்துவிட்டனர்.

என்னுடைய சொற்களைக் கேட்க விரும்பிய நண்பனே உண்மையை அறவே ஒளித்து வைத்துவிட்ட ஒரே காரணத்தால் நாடு இன்றும் படும் அலங்கோலத்தை நாம் நேரில் காணலாம். உண்மையைப் பின்பற்றி நாடும் மக்களும் ஒழுகும் போதன்றி உயர்வடையாது.

சிந்தித்துப்பார் அமிர்தயோகம், சித்தயோகம், மரண யோகம், புத பகவான், சனி பகவான், சூரிய பகவான், ராகு காலம், கரி நாள், தனி நாள், குருட்டு நாள் எத்தனை பொய்களை எளிய மக்கள் மேல் சுமத்தி நாசபடுத்தி வைத்துள்ளனர், வருகின்றனர் என்பதைப் பற்றி எண்ணி சரியான முடிவுக்கு வா.

எளிய மக்களுக்கு என்ன வந்தது? இன்று, நம் நாட்டில் உள்ள வக்கீல்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள், இஞ்சினியர்கள்.

புது வெளிச்சம்

121