பக்கம்:புது வெளிச்சம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சூத்திரமாகாது, ஆன்மீக ஆக்க சக்திக்கான சூத்திரம் இந்த ஒமித்யேகாட்டிசரச் சூத்திரம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 'ஓம்' எனும் எழுத்தின் பொருளை உபநிசத்து நமக்குமேலும் விவரித்து விளக்குகிறது.

அதுவே நான்; அதுவே ஆத்மா. அதுவே அகம், அதுவே மற்றும் பிரணவம், சக்தி, பிரம்மம், கடவுள், தெய்வம் எனப் பல்வேறு பெயர்களை இட்டு வழங்கும் பரம் என்றும் கூறுகிறது.

"பிரம்ம வித்யாம் சர்வ வித்யா பிரதிஷ்டாம்" என்கிறது இந்தச் சூத்திரம். உலகிலுள்ள மற்ற பொருள்களைப் பற்றிக் கூறும் எல்லா வித்தைகளும் பிரம்ம வித்தையில் அடங்கியுள்ளது என்பது இதன் பொருள்.

பிரம்ம வித்தை = பிரம்மத்தை அறியும் வித்தை என பொருள்படும். பிரம்மம் - கடவுள் தன்னந்தனியாக, தனி ஒன்றாக வானிலோ, மண்ணிலோ இருக்கவில்லை; அதுபொருளோடு ஒன்றியுள்ளது. நான். நீ அவன், அது, அவை எனும் ஒவ்வொரு சடப்பொருளிலும் ஒன்றியுள்ளது. எனவே, உன்னிட முள்ள அந்த ஆத்மாவை, நீ உன் அறிவைக் கொண்டு உணர்ந்து கொள். உன்தெய்வத்தை நீ ஆராதனை செய், போற்று. சுருங்கக் கூறின் உன்னை நீ போற்று. உன்னை பிறர் துாற்ற என்றும் இடம் கொடாதே. உனக்கு நீயே சாட்சியாக இரு.

உன் உள்ளத்தில் படிந்துள்ள இருள்நீங்க, ஐயம் அகல, இந்த ஒரு உபநிசத்தைப் படித்து ஒர்ந்துகொள்.

"எவர் அறிவில் இருந்து கொண்டு அறிவினுள் உறைகின்றாரோ, எவரை அறிவு அறிந்துகொள்ளவில்லையோ, எவருக்கு அறிவு உடலாகின்றதோ, எவர் அறிவினுள் நின்று அதை ஆள்கின்றாரோ, அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர்” என்கிறது.



6 ᗛ

கவிஞர் வெள்ளியங்காட்டான்