பக்கம்:புது வெளிச்சம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏன் இதனை உபாசிக்கவேண்டும் எனின், மற்றொரு உபநிசத்து அதனை இவ்வாறு விளக்க முற்படுகிறது.

பூதங்களின் ரசம் (சிறப்பான பகுதி) மண், மண்ணின் ரசம் தண்ணிர் தண்ணில் ரசம்தாவரவர்க்கம்; தாவாங்களின் ரசம் மனிதன்; மனிதனின் ரசம் வாக்கு, வாக்கின் ரசம் உத்கீதம் அதுவே ஒம்!

மனிதனின் ரசம் வாக்கு எனப்படுகிறது. எனவே இன்று வாழும் ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தன் வாக்கின மூலமாக வெளிப்படுத்திக் கொள்கிறான்.

ஒரு சிறிய முல்லைப்பூதன் மேம்பாட்டை அல்லது இயல்பைக் காற்றோடு கலந்து கமழும் திறத்தினால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. முந்திரிப்பழம் தன்னுள் சேர்த்துவைத்துக் கொண்டுள்ள இனிய ரசத்தினால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. குயிலும் காக்கையும் தத்தம் குரலினால் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. புலியும் பூனையும், தேக்கும் திமிசும், பசுவும் எருமையும் போலவே மனிதர்களும் தத்தம் வாக்கினால் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

இதில் இன்னொரு விவரம்நான் யாராயிருக்கிறேன் என்பது கணக்கில் சேர்க்க இயலாது! என் வாக்கில் என்ன இருக்கிறது என்பதுதான் நாம் எடுத்துக்கொள்ளவுள்ளது.

கீதம் = இசைப்பாட்டு எனப் பெரியோர் உணரச் செய்துள்ளனர். எனினும் பொதுவான பொருள் ஒலி என்பதுதான். ஆனால் உத்' என்னும் பகுதி என்ன சொல்லுகிறது என நாம் ஆராய வேண்டும்.

உத் + அயம் = உதயம், உத்தமன், உத்தரவு, உத்வேகம், உத்யோகம், உத்தண்டம், உத்தரம், உத்சவம், உத்பத்தி போன்ற சொற்களில், உள்ள பகுதிப்பொருள் எவ்வளவு மகத்தானதாயுள்ளன என்பதை நீ எண்ணிப்பார். எனவே உன்வாக்கில் உன்னிட முள்ள மேன்மைகள் (தெய்வீகம்) வெளிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். என்பது தான் உத்கீதத்தின் குறிப்பு.

இந்த உத்தின் உயர்வை நா நலம் என்னும் நலன் (ஒரு) உடைமை அதாவது ஒரு அரும்பொருள் அந்நலம் இதர எந்த ஒரு நலத்திலும் உள்ளது போன்ற ஒன்றன்று: எல்லா நலன்களைக் காட்டிலும் மேலான நலன் நாநலன். என்று வள்ளுவர் விளக்குகிறார்.

10 ᗛ

கவிஞர் வெள்ளியங்காட்டான்