பக்கம்:புது வெளிச்சம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்படிப்பட்ட மேன்மைக்குரிய பொருள் இதில் என்னதான் இருக்கிறது? என்று கேட்கிறாயா? சரி! இதோ சொல்கிறேன். கேட்டுக்கொள், பயப்படாமல் கேட்டுப் புரிந்துகொள், நீ புரிந்துகொண்டொழுகும் போதுதான், 'சரியான தமிழன்’ எனும் தகுதிக்குரியவனாகிறாய்.

'பொய்யை விட்டு நான் மெய்யை நாடுகிறேன். என்பது தான் அதன்பொருள்; புரிகிறதா? ஏன் விழிக்கிறாய், நினைவு தவறி விட்டதா? நல்ல வேளை, மூர்ச்சை போட்டுக்கொண்டு கீழே விழவில்லை, அந்த அளவில் நான் உன்னை மெச்சிப் பாராட்டுகிறேன். சொல்ல பயமாக இருக்கிறது. அல்லவா?

பொய்யை விட்டு, மெய்யை நாடிக் கொள்ளாதவரையில் நீ உள்ளம் சுத்தமில்லாதவனாகவே இருப்பாய். உடலை மட்டும் நீராடிச் சுத்தம் செய்துகொண்டு உள்ளத்தைப் பொய்யால் மாசுபடுத்திக்கொண்டு வாழும் வாழ்க்கை அசுத்த வாழ்க்கை, முற்றிலும் அவல வாழ்க்கை என்பதை புரிந்துகொள்ளாததேன்? எதையறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ, அல்லது எல்லா நூல்களாலும் எது ஒன்றே அறியப்பட வேண்டியதாகுமோ அது இதுவேதான். அறிய வேண்டியதை அறிந்தவன் அடைய வேண்டியதை அடைந்தே தீருகிறான். அகமகிழ வேண்டியதற்கு மாறாய் அச்சமடைவது அறியாமை எனப்படும். நண்பா! என் வார்த்தையை நீ நம்பாவிடினும் நமது ஆசான் வார்த்தையை நம்பலாமல்லவா?

'உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்திலெல்லாம் அவன் நிலைபெற்று என்றென்றும் உள்ளவனாகிறான்”, என்பது நூற்றுக்கு நூறு உண்மையானது, உலகத்தில் மனிதனாகப் பிறந்த ஒருவன் அடைய வேண்டிய பெரும் பேறுகளில்இதைவிடவேறெதுவும் உயர்ந்த தொன்றில்லையே.

உள்ளத்தில் பேராசையை ஒளித்து வைத்துக்கொண்டு உதட்டளவில் நல்லவனைப்போல் பேசிக் கிடைத்த காசைக் கெட்டியாகப் பிடித்துகொள்வது. வழக்கமாயிருந்தால் ஒருவன் siiக்கிரம் பணக்காரனாய் விடலாம். 'நூற்றுக்குமேல் ஊற்று' என்பது அனுபவம். பணமிருந்தால் பணம் வந்து ஒட்டிக்கொண்டே

18 ᗛ

கவிஞர் வெள்ளியங்காட்டான்