பக்கம்:புது வெளிச்சம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

சத்யமேவ ஐயதே


'முண்டகோபநிசத்து: 2. 2-ம். சூத்திரம், சத்யமேவ ஜயதே' என்று சொல்கிறது. எது சுயம் பிரகாச மானதோ, அணுவினும் சூக்கும மானதோ, எதனிடம் உலகங்கள் நிலைபெறுகின்றனவோ, அதுவே அழிவில்லாத பிரம்மம். அதுவே பிராணன், அதுவே வாக்கும் மனமும், அதுவே சத்தியம், அதுவே அமிர்தம். சித்தம் அழகியோனே! அதையே நீ குறிபார்த்து எய்ய வேண்டும்.

‘சுயம் பிரகாசமானது எது?' நண்பனே சிந்தித்துத் தெரிந்துகொள்ள முயல்க! வானத்தை உதயகாலத்தில் பார். உலகில் கவிழ்ந்துகொண்டிருந்த பேரிருளை நீக்கி ஒளிரும் உதய ஞாயிறை கண்கொண்டு காண்கிறாய் இல்லையா? இந்தச் சூரியன் யார், அல்லது என்ன?

22 ᗛ

கவிஞர் வெள்ளியங்காட்டான்