பக்கம்:புது வெளிச்சம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உண்மையான தெய்வீகத்தை அறவே இழந்து விட்டோமெனச் சொல்ல நான் வெட்கப்பட்வில்லை. வெறும் பணத்தைக் கொண்டு மனிதன் மகோன்னத நிலைக்குச் சென்றுவிட இயலாது. நாட்டில் அமைதியிருக்காது; ஆனந்தமும் இருக்காது.

உடைமை உடலுக்கானது; உண்மை உள்ளத்திற்கானது. 'தத் யத் தத் சத்ய மசெளன சதித்யோ!' அந்தச் சத்தியம் எதுவோ அதுதான் இந்த ஆதித்யன் உண்மையைக் கைவிட்ட உடைமையும், உருவ வழிபாடும் மக்களை அழிவுக்குத் தள்ளிக்கொண்டு செல்கிறது.


❖ 'குப்பை' இது ஒன்றுதான் நாட்டில் எல்லாவற்றையும்விட
மிக அதிகமாக ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகிக்
கொண்டிருக்கும் பொருள்.
- ஸ்ரீன் ஆலின்

❖ சத்தியில்லாத உணவும், சத்தியமில்லாத கல்வியும்,
   உடலுக்கும் உளத்துக்கும் உறுதியளிக்காது.

  'ஒன்றே குலம் - ஒருவனே தேவன்' என்றார் திருமூலர்.
  ஆனால், 'முப்பத்து முக்கோடி தேவர்கள்' என்று
  மொழிகிறான் தமிழன்.

  நெஞ்சுரமில்லாதவன், ஐந்தடுக்கு மாளிகையில் வசித்தாலும்
  அஞ்சியே சாகிறான்.
- வெ.

26 ᗛ

கவிஞர் வெள்ளியங்காட்டான்