பக்கம்:புது வெளிச்சம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8



சுவர்க்கம்

லகிலுள்ள கோடானுகோடி மக்களின் உள்ளங்களில் நிரந்தரமாகக் குடியிருந்து கொண்டுள்ள கவர்ச்சிகரமான ஒருசொல் 'சுவர்க்கம்' என்று பெயர்கொண்டது இது ஒன்று தான். சரிவரப் பொருளைப் புரிந்து கொள்ளாத இந்தச் சொல்லின் முதலெழுத்து திரிந்து இரண்டாமெழுத்து கெட்டுச் சொர்க்கம்! என இது வழங்கப்படுகிறது. இதே பொருள், தமிழில் துறக்கம், வீடு, மோச்சம் எனும் சொற்கள் மூலமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

துறக்கம் எனும் சொல்லுக்குத் தேவலோகம் என்று அகராதி பொருள் கூறுகிறது. வானுலகம், அதாவது வானவர் வசிக்குமிடம் என்பது கருத்து. ஆயினும், பரலோகம் என்பது தான் அதன் சரியான பொருள் எனக் கூறலாம்.

புது வெளிச்சம்

31