பக்கம்:புது வெளிச்சம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பலம், பலத்தால் தவம், தவத்தால் சிரத்தை, சிரத்தையால் கூரியபுத்தி, கூரியபுத்தியால் திடமான சங்கல்பம், திடமான சங்கல்பத்தால் மனத்தெளிவு, மனத்தெளிவால் சாந்தி, சாந்தியால் நிலையான சித்தம், நிலையான சித்தத்தால் உண்மை மறவாமை, உண்மையை மறவாமையால் அதையே இடைவிடாது நினைத்திருத்தல், அத்தகைய நினைவால் விஞ்ஞானம், விஞ்ஞானத்தால் ஆத்மாவை (தெய்வம்) ஒருவன் உணர்ந்தனுபவிக்கிறான். ஆகையால், அன்னத்தை அளித்த ஒருவன் இவையனைத்தையும் அளிக்கிறான். அன்னத்திலிருந்து பிராணிகளுக்குப் பிராணன்கள் வளர்கின்றன; பிராணன்களால் மனதும், மனதால் விஞ்ஞானமும், விஞ்ஞானத்தால் ஆனந்தமும், அதனால் உலகின் தோற்றுவாயாகிய பிரம்மமும் அடையப் படுகிறது என்று அறுதி செய்தனர்.

இந்தக் கருத்தைச் சூத்திரமாக்கினர்; அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமய கோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என்று. வேறு ஒரு ரிசி மனோமய, பிரான சரீரோ பாரூபா, சத்ய சங்கல்ப; ஆகா சாத்மா என்று சூத்திரம் செய்துள்ளார்.

'அந்தப் பிரம்மம், மனோவடிவமாயுள்ளது. உயிரை உடலாய்க் கொண்டுள்ளது. சத்தியமே சங்கல்பம் - குறிக்கோள் ஆகாசம் போலும் அதுவே ஆத்மா - பிரம்மம்', என்கிறார் இன்னொரு ரிசி.

'எதஸ்ய பிராமனோநாம சத்யமிதி' அந்திம பிரம்மத்தின் பெயர் சத்தியம் என்கிறார் மற்றொரு ரிசி எப்படிப் பார்த்தாலும் சத்தியம் தான் பிரம்மம் என்பது உபநிசத்துகளின் முடிந்த முடிவு. இதைமாற்ற முடியாது.

திட்டவட்டமாகத் தெய்வம் என்பது இதுதான் - அதாவது சத்தியம்தான் என்று தெரித்திருந்தும், அதை மக்களுக்குச் சரிவர எடுத்து விளக்கிக் கூறி ஒழுக்கத்தை ஒம்பச்செய்து. உய்விக்க மனமில்லாத சூழ்ச்சிக்காரர் கோவில்களைக் கட்டி குடமுழக்கு விழா கும்பாபிசேகவிழா எனக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.

இவர்கள் இப்படியே இருக்கட்டும். நாம் இந்தக் கோவில்களைப் பற்றி இனி கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம். 'எப்பொருள்

38

கவிஞர் வெள்ளியங்காட்டான்