பக்கம்:புது வெளிச்சம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

தியானம்



தியானம் என வழங்கும் இந்தச் சொல் பண்பாட்டிற்கும் செயற்பாட்டிற்கும் மிக இன்றியமைந்த ஒரு சொல் எனப்படுகிறது. இதுகாறும் உலகிலில்லாத நூதனமான ஒன்றை உன்னி உணர்ந்து செய்து முடிப்பதற்குக் காரணமாகவும் உள்ளது.

ஆனால், இச்சொல்லிற்குரிய திட்டவட்டமான பொருள் இன்னது என்று அகராதி, தமிழில் கூறாத காரணத்தால் உரிய பொருளை இழந்து தவறான பொருளில்தான் உலகம் இன்று வழங்கி வருகிறது. அது ஐம்புலனடக்கிச் சிவ யோகம் செய்தல், அனுட்டானம், சிந்திப்பு. நினைவு எனப் பொருள்படுத்தப் பட்டுள்ளது.

44 <

கவிஞர் வெள்ளியங்காட்டான்