பக்கம்:புது வெளிச்சம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்வரையில் வேறொன்றில்லை எனக் கூறும் தகுதியுள்ள நிலை. இந்நிலை பரவலாக உபநிசத்துக்கள் மூலம் மக்களுக்குப் போதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொன்றுதொட்டு நாளது வரை நாட்டின் நடைமுறை தான் என்ன ? இதற்கு நேர் எதிர்மாறான நிலை இது ஏன்? உண்மைகள் எதற்காக மறைக்கப்பட்டது? யார் இதற்குக் காரணகர்த்தா என இனி நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

1954ம் ஆண்டு வாக்கில் கர்நாடக முதன்மந்திரியாக இருந்த கெ. அனுமந்தய்யா காலத்தில் சர்க்கார் முயற்சியில் சமஸ்க்ருதி என்ற பெயருள்ள ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நூலில் பதினேழாம் பக்கத்தில் உள்ள ஒரு பாராவை இங்கு தமிழ்படுத்தி எழுதுகிறேன்.

"பெளத்த மதம் நாட்டில் பிரபலமடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வைதிக தருமம் வெகுவாகச் சிதிலமாகிக் கொண்டிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் சங்கராச்சாரியார், தருமத்தின் அதிமுக்கிய சாராம்சங்களை வைதிக மதத்தின் புனருத்தாரன நிமித்தம் ஆதாரங்களாக எடுத்துக் காட்டியும், பல்வேறு தெய்வ ஆராதகர்களனைவரும், சிந்தித்துப் பார்க்கும் போது ஒரே பரப்பிரம்மத்தின் உபாசகர்களே ஆகிறார்களென்றும் போதித்து, விஷ்ணு, சிவன், சூரியன், அம்பிகை, கணநாதன், ஆகிய முக்கியமான இவ்வைந்து தெய்வங்களையும் ஒன்று சேரவைத்து, தத்துவத்தின் உண்மைகளை எடுத்துக்காட்டி மடங்களை ஏற்படுத்தி வைதிகமதத்தை சுத்தமான அடித்தளத்தின் மேல் நிலைநாட்டி பெளத்த மதத்தின் பிராபல்யத்தைத் தடுத்து, இந்து நாகரீகத்தை இரண்டாவதாக பிரதிஷ்டை செய்தார், பெளத்த மதத்திலிருந்த முக்கியமானத் தத்துவங்களையெல்லாம் தம்முடைய சித்தாந்தத்தில் அடக்கி தெய்வீக நிலையைக் காப்பாற்றினார்.

சங்கராச்சாரியால் பெயரிட்டுக் கூறி வழிபாடு செய்வதற்கென காட்டிய, விஷ்ணு, சிவன், சூரியன், அம்பிகை கணநாதன் எனும் ஐந்தும் சடப்பொருட்கள்தானே. உபநிசத்துக்கருத்துக்கு முரணாக இவ்வைந்து ஜடப்பொருட்களையும் தெய்வங்கள் என்று மக்களுக்குக் காட்டியது எப்படி உண்மையாகும்.

48

கவிஞர் வெள்ளியங்காட்டான்