பக்கம்:புது வெளிச்சம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடமையுணர்வுள்ள ஒரு ஆண்மகனின் தலையாய பண்பு அவசியமேற்படுங்கால் வெளிப்படும் உணர்வோடு கூடிய செயல்பாடு இது. தயக்கமின்றி பிரதிப்பயன் எதிர்பாராது தன் நேரத்தையோ அறிவையோ, செல்வத்தையோ தன்னையையோ - அர்ப்பணித்துக் கொள்ளுவதன் பெயர் தியாகம். அறிவில்லாத செல்வமும், ஆராய்ச்சியற்ற கல்வியும், கடமையுணர்வில்லாத அதிகாரமும், அஞ்சி ஒதுங்கவோ அசிரத்தைகாட்டவோ, எள்ளி இகழவோ செய்து ஒதுக்கப்படுவது இந்தத் தியாகத்தை மட்டுந்தான்.

கோகினுார் வைரமாயிருந்தால் தான் என்ன? கோழியும், குருவியும் அதை அசட்டை செய்வது போன்ற நிலைதான் தியாகத்தின் ஆக்க மறியாத இந்த அசடர்கள் நிலையும். வரலாற்றுணர்வோ, இலக்கிய அறிவோ, தத்துவ ஞானமோ இல்லாத எந்த ஒரு மனிதனும், அசாதாரணமான இந்தத் தியாகத்தின் உண்மை மதிப்பை அறியாதவனாகவே இருப்பான்.

செயற்கரிய செய்துவக்கும் ஆன்றோர்களால் போற்றிக் கொள்ளப்படவுள்ள தியாகத்தின் சக்தியை எந்தச் சொற்களைக் கொண்டும் விளக்கிக் காட்ட இயலாது என்றுதான் பொதுவாகக் கூற முடியும்.

மகாத்மா காந்திஜீயிலிருந்து திருப்பூர் குமரன் வரை இறந்தும் இறவாது என்றென்றும் நின்று நிலவும் தத்தம் தியாகச் செயல் மூலம் அமரராய், ஆதர்சபுருஷராய் நம் உள்ளங்களில் குடியிருப்பவர்களை நாம் நினைத்துப் பார்த்தால் இந்த மகத்தான சொற்பொருள் தெற்றென விளங்கி விடுகிறதல்லவா?

‘வாழ்வு’ எனும் சொல்லின் பொருளைச் சரிவர அறியாது; அன்றும், இன்றும் மனிதராய்ப் பிறந்து வாழ்வதும், வாழ்ந்து கொண்டும் உள்ளவர்களில் கூலிக்காரனும் உண்டு கோடீசுவரனும் உண்டு; அடிமையும் உண்டு ஆண்டியும் உண்டு.

மனிதப் பிறவியைப் பெற்றவன்கூடப் பெருவாழ்வைப் பெற்றிருந்தும், அவ்வாழ்வின் பயனானப் புகழைப் பெறாது இறந்தான் என்றால் அவ்வளவும் வீண்தான். அதுநீர்மேல் வாழ்ந்த ஒரு குமிழியின் வாழ்வுதான்; என்று நான் கூறினால் எந்த அறிஞனும் இதைத் தவறு என்று கருதமாட்டான். எனவே வாழ்வு வீணாகக்-

புது வெளிச்சம்

51