பக்கம்:புது வெளிச்சம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எப்போதிருந்து சீர்கெட்டிருக்கிறது? எனின், சமண மதத்தைக் கழுவிலேற்றி, புத்த மதத்தை தேசப்பிரஷ்டம் செய்து திருக்குறளையும் புறநானூற்றின் வரலாற்று ரீதியான உண்மைகளையும் புறக்கணித்து விட்டுவிடச்செய்த ஆதிகாலாடி சங்கராச்சாரி காலத்திலிருந்து, உபநிசத்துகளின் உண்மைகளை ஒளித்து வைத்து மாற்றாகப் 'பகவத்கீதை' என ஒருநூலியற்றி இந்து மதத்தின் தலையில் கவிழ்த்த அந்த நாள்தான் தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் தலைக்குனிவுக்கு தாழ்வான நிலைக்கு கடைக்கால் கோலிய முதல்நாள் என்று என் உள்ளத்திற்குத் தெற்றெனப் புலப்படுகிறது. இத்தோடு நின்றுவிடாது, சிவன் பெரிய தெய்வம், விஷ்ணு பெரிய தெய்வம் எனும் போர் புரியச் செய்தபோது மக்கள் முழுக்க முழுக்க அடிமைப்பட்டகாலம். யாருக்கு வேறு யாருக்குமல்ல, ஆரியர்களுக்குத்தான். ஆரியர் முழுக்க முழுக்கப் பொய்யாக உண்டு பண்ணித் தமிழர்களுக்குப் படைக்கும் கடவுள், காக்கும் கடவுள் அழிக்கும் கடவுள் எனப் பெயரிட்டுப் பிரசாரம் செய்து வந்த காலகட்டத்தில் மக்கள் நம்பிப் பின்பற்றி ஒழுகத் தொடங்கிய அந்த நாளில், 'இவையெல்லாம் உண்மையா?' எனக்கேட்ட மக்களுக்கு பக்குடுக்கை நன்கணியார் பாடிக்காட்டினார் அதை மறுக்கவும் முடியாமல், தொடுக்கவும் முடியாமல் என்னசெய்வது அரசனே ஆரிய தருமத்தை ஆதரிக்கும் போது ஒரு எளிய கவிஞன் என்ன செய்ய முடியும்.

ஒரு சிறிய ஊரில் ஒரு வீட்டில் இழவுப் பறைவிக்கிறது. இன்னொரு வீட்டில்

மங்கலவாத்தியம் முழக்கப்படுகிறது. மணம் புரிந்துகொள்பவர் மகிழ்ச்சியோடு பூமாலைகள் சூட, கணவனை இழந்தவள் துக்கம் தாங்கமாட்டாது அழுது சோர்ந்த கண்களில் தாரை தாரையாக நீர் சோர படைத்திருக்கிறான் அன்பர்களே. பண்பு என்பதை அறியாத அந்தப் படைக்கும் கடவுள் எனும் பொருள்படுவரிகள் (ஒரில் நெய்தல் கறங்க - ஒரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் - புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்பைதலுண்கண் பணிவார்ப் புறைப்பப் படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன் என்ற வரிகள் படைக்கும் கடவுளைப் பற்றிய பொய்யைக் கண்டிக்க முடியாது கண்டித்துரைத்த உண்மைக் கருத்தல்லவா?

56

கவிஞர் வெள்ளியங்காட்டான்