பக்கம்:புது வெளிச்சம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“உலகத்தில் மிக அதிகமான சுகபுருவுன் யார்? எனும் வினாவிற்குச் சரியான விடை, இப்போது பிறந்திருக்கும் குழந்தை அல்லது பைத்திய மருத்துவ விடுதியிலிருக்கும் சித்தசுவாதீன மற்றவன்” என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் எனில், இந்த இருவருக்கும் சுகத்தைப் பற்றிய எண்ணமே இருக்கவியலாது. நானே மிக அதிகமான சுகபுருசன் என்று வெளிப்படச் சொல்லிக் கொள்பவனை உலகம் முழுவதம் தேடினும் நாம் காண முடியாது. ஆம் ஒவ்வொரு மனிதனும், 'சுகம் எங்கே எங்கே' என்று தேடித் திரிகிறவனாகவே இருக்கிறான். சுகம் இருப்பதாக எண்ணித் தேடிவைத்திருக்கும் எந்த ஒரு பொருளிலும் அவன் சுகத்தைக் காண்பதே இல்லை. நிராசையுள்ளவனாகி இறுதியில் அவன் ஏமாற்றத்துக்குள்ளாகுவதும் உண்டு.

எனவே ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் சுகம் எனும் இது, வெளியே உள்ள எவற்றிலும் பெறப்படும் ஒன்றன்று. தன்னுள்ளேயே இருக்கும் ஒரு அம்சம்தான் அது என்ற அத்யாத்ம நிலைபாட்டிற்கே வந்தாலும் வரலாம். இந்த அத்யாத்ம நிலைதானோ சீவன்கள் அனைத்தும்.

உயிர் எனும் சொல்லுக்கு ஆன்மா, காற்று, சீவன் என வேறு பெயர்களும் உண்டு. எந்தப் பெயரிட்டு வழங்கினும் காற்றுதான் உயிர். காற்றின் குழந்தை நெருப்பு: நெருப்பின் குழந்தை நீர் நீரின் குழந்தை நிலம்; சமஸ்டி வடிவில் இந்நான்கும் ஒன்றிய நிலை சீவநாசிகள் மனிதனுட்பட அனைத்துமே.

இந்த மறுபிறப்பு சுத்தமான ஒரு படுபொய். உபநிசத்துகளிலேயே இது செருகப்பட்டுள்ளது. வேறு சான்றுகள் தேவையில்லாதது என்று நான் கருதுகிறேன். ஆவினும் ஈசா வாஸ்யோப நிசத்து பதினேழாம் சூத்திரம் சொல்வதுதான் மிகவும் சரியான கருத்து.

'மூச்சுக்காற்று அழிவில்லாத வாயுவை அடையட்டும். பிறகு இந்த உடல் சாம்பலாக முடியட்டும்'. வாயு - ஈனில - மம்ருத மதேதம் - பஸ்மாந்தம் - சரீரம் என்கிறது அந்தச் சூத்திரம்.

இதுதான் உண்மை அறிவுக்குப் பொருந்துவது. எனவே மனிதனுடைய உயிர்மட்டுமல்ல; எந்த ஒரு சீவனுடைய உயிரும் உடலை விட்டுப் பிரிந்தபின் பிறக்கும் சக்தியை இழந்துவிடுகிறது.

58

கவிஞர் வெள்ளியங்காட்டான்