பக்கம்:புது வெளிச்சம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்கிறது உபநிசத்து. இதன் பொருள் அந்தப் பிரமத்தின் பெயர் சத்தியம் என்பதாம்.

"மனோமய, பிரான சரீர நேதா, பிரதிஷ்டிதோ அன்னே, இருதயம் சந்நிதாய” என்கிறது உபநிசத்து. ‘கடவுள், மனோரூபியாயும் சரீத்தையும் பிராணனையும் நடத்துபவராயும் இருதயத்தில் (புத்தியில்) நிலைபெற்று, உடலில் உறைபராயும் விளங்குகிறார், என்று சொல்லுவது எவருடைய கண்ணிலும்படவில்லையா? உபநிசத்துகளை எடுத்து மாணவர்களுக்குப் போதனை செய்ய அரசாங்கம் முன்வருமானால் பத்து வருடங்களில் தமிழ்நாடு பிரம்மலோகமாகிவிடாதா?

சத்தியத்தை அறவே ஒதுக்கி வைத்துவிட்டு, உருவ வணக்கத்திற்கு இந்த விஞ்ஞான யுகத்தில் கதவு திறந்துவிட்டுக் கொண்டு செய்யும்ஆட்சியில் மனிதன் சுகத்தையும் அமைதியையும் காண முடியுமென்று சங்கராச்சாரியார் சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.

பூமியேன் கட்டாந்தரையாக மாறிக்கொண்டு வருகிறது? மக்கள் ஏன் பாவிகளாக மாறிக்கொண்டு வருகிறார்கள்? பயன்படுத்தப்படாமையினால் தானே கூட்டியெறியாத வீடு வாசல் குப்பை நிறைந்திருக்காமல் வேறென்ன இருக்கும் !

உபநிசத்துகளை உன்னிப்பார்க்கும்போது கடவுள் அவதரிக்கும் ஒன்றல்ல என்று கூறலாம். அவதாரம் செய்யும் மனிதன் இருக்கலாம். ஆனால் அவதாரம் செய்யும் தெய்வம் இருக்க முடியாது. மனிதனிடம்தான் தெய்வம் இருக்க வேண்டுமன்றித் தனித்து வேறு எந்த இடத்திலும் தெய்வமென ஒன்றில்லைஎன்று உபநிசத்து உண்மையை உரைக்கிறது. இப்படி இருந்தும் எத்தனை கோயில்களை இந்த இல்லாத தெய்வம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுமல்லாமல் மக்களுக்கு காலாகாலமாகத் தீராத செலவும் வைத்துக் கொண்டே உள்ளன. எனவே இது நல்லதல்ல என்று சொல்லுகிறேன். இது கூடாத செயல்; நம்மை நாசம் செய்யும் செயல் இந்தக் கோவில் கட்டிக் கும்பிடும் செயல் வேண்டவே வேண்டாம். ஏற்கனவே நாம் பாவிகளாகிக் கொண்டிருக்கிறோம். எனவே, எங்கும் சாந்தி இன்றிச்சமாதானமின்றி நன்னம்பிக்கையின்று

62

கவிஞர் வெள்ளியங்காட்டான்