பக்கம்:புது வெளிச்சம்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை


பநிசத்துக்கள், இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள் போன்ற இன்னும் பலப்பல இனியன, இன்னாதன என மூத்தோர்கள் கோர்த்த முத்துக்கள் அனைத்தும் மானிட வர்க்க்த்தை உய்விக்கவே.

இன்றைய இளைய தலைமுறைக்கு, 'பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப அவைகளை எல்லாம் கண்டுகொள்ள விருப்பமற்றுப் போய்விட்ட காலகட்டத்தில், மீண்டும் உபநிசக் கருத்துக்களைப் புதிய தலைப்புகளில் ஒரு புதிய கண்ணோட்டத்தோடு இன்னும் சொல்லப் போனால் இதுவரை தமிழில் யாரும் எழுதாத முறையில் மக்களின் விழிப்புணர்வுக்காகவே பொட்டில் அறைவது போன்றதொரு விளக்கங்களோடு, ‘புது வெளிச்சம்’ என்ற தலைப்பில் என் தந்தை நூலாக்கித் தந்திருக்கிறார்.

இதை மூத்த அறிஞர்களில் சிலர் மட்டுமே பார்க்கக்கூடும், விவாதிக்கக்கூடும். பிறகு அந்நூல்கள் ஏதோ ஒரு மூலையில் உறங்கிவிடவும் கூடும். மற்ற நல்ல நூல்களைப் போலவே !

ஆயினும், ஒரு அசுர நம்பிக்கை... ! அணுகுண்டால் முற்றிலும் அழிவுற்ற ஜப்பானை, இறந்துபட்ட ஆத்மாக்களின் நினைவுகளோடு, பேரெழுச்சியோடு, உறுதியோடுகூடிய, ஒன்றுபட்ட அயராத உழைப்போடு, இனி என் நாட்டின் மீது

vi

கவிஞர் வெள்ளியங்காட்டான்