பக்கம்:புது வெளிச்சம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருங்குடியென்பதறிந்து அகமகிழ்ந்து வாழ்ந்து வந்தாள். குறையெனக் கூற எதுவொன்றுமில்லா குடும்பத் தலைவியான அவளுக்கு உள்ளத்தில் இரண்டொரு குறைகள் குடியிருந்து கொண்டிருந்தன.

அந்த குறைகள் வியப்புக்குரிய குறைகள். ஆம் இலக்கிய வாழ்வுக்குரியவை அவை. மற்றவர்கள் அறிந்து பின்பற்ற வேண்டிய குறைகள் எனின் மிகைபடக் கூறியதாகாது.

அதே குடியில் பிறந்து முன்தலைமுறையில் வாழ்ந்த வீரன் ஒருவன் பகைவருடன் போரிட்டு இறந்து நடுகல்லாகி அவ்வூரார் நினைவில் நிலைத்திருந்தான். அந்நடுகல்லுக்கு நாள் தவறாது அவ்வீரமகள் ஒரு சுரைக்குடுக்கை நீர்பெய்து கழுவி, சந்தனக் கட்டையெரித்து நறுமணப் புகைகாட்டித்தன் குறை நீக்கக் கோளிப் பிரார்த்திக்கிறாள்.

முதல் குறை இதுதான். “விருந்தெதிர் பெறுவதில்லம்மயானே!" என்பது ஒவ்வொரு நாளும் என் வீட்டுக்கு விருந்தினர் வரப் பெறுவேனாக, என்கிறாள் விருந்தோடு உண்ணுதல்தானே உண்டிக்கு அழகு! விருந்தில்லாது உண்ணும் உணவு சுவையாயினும் அழகற்றதுதானே.

சரி அடுத்து என்ன? என்கிறீர்களா அவள் வாய் மூலமாகவே அதுவும் உரைக்கப்படுகிறது. என்னையும், ஒருவன் பொருள் நசை வேந்தனொடு நாடுதரு விழுப்பகை எய்துக எனவே!

அப்போது அந்தப் பகுதியை ஆண்டுகொண்டிருந்த குறுநில மன்னன் நீங்காத பொருளாசையுடையவன். அவனால் மக்களுக்கு அமைதி கிடையாது. எனவே தன் கணவனுக்கு அந்தப் அரசனோடு ஒரு போர் வரவேண்டுமாம். அப்போரில் அவ்வரசன் இறந்து பட்டு, நல்ல அரசன் ஆட்சிக்கு வரவேண்டுமாம். சிந்தித்துப் பார்க்க வேண்டிய சிறந்த இலக்கியப்படைப்பு இது. விருந்தெதிர் பார்த்து நீதிநெறியறிந்து வாழ்ந்தனர். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் தமிழ் மக்கள். இந்த மக்களுக்கு உபநிஷத்திலிருந்து கிடைத்த இந்த ஒரே ஒரு உபதேசமாவது முழுமையாகத் தர மறையவர் மனங்கொள்ளவில்லை.

புது வெளிச்சம்

69