பக்கம்:புது வெளிச்சம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15


சமத்வம், சகோதரத்வம், சுதந்திரம்


’வளிமுதலாய் எண்ணிய காற்று, வெப்பம், குளிர்ச்சி மூன்றும் மிகினும், குறையினும் உடலுக்கு நோய் செய்யும் என்கிறார் வள்ளுவர். இக்கூற்றைச் சரியல்ல என மறுக்கும் ஆற்றல் எந்தக் காலத்திலும் எவர் ஒருவருக்கும் சாத்தியமாயிருக்காது ஏனெனில் இது பரிபூரணமான' உண்மையானதனால்!

இது போன்றே ஒரு நாட்டுக்கு நோய் செய்யும் மூன்று தன்மைகளும் உள்ளன. அவற்றின் பெயர், சமத்வம், சகோதரத்வம், சுதந்திரம் எனப்படும். சுய ஆட்சியுரிமையுள்ள ஒரு நாட்டின் ஆரோக்கியமான சுதந்திரத்திற்கு சமத்துவம், சகோதரத்வம் இரண்டும் இன்றியமையாதன. இவ்விரண்டும் இல்லாத சுதந்திரம் கண்ணும் காதும்

புது வெளிச்சம்

71