பக்கம்:புது வெளிச்சம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எவரும் கைவைக்கமுடியாது என்ற பெருமிதத்தோடு மக்கள் செப்பனிட்டது போன்றதொரு அதிசயம் நம் நாட்டிலும் நிகழக் கூடுமல்லவா?

மேற்கத்திய நாகரிக மோகத்தில், பண்பாட்டுச் சிதைவில் ஒழுக்கம் நலிவுற்று, உடல் மெலிவுற்று வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் நம் இளைய தலைமுறைக்கு, வானை வளைக்கும் விஞ்ஞானம், வளரும் பொருளாதாரம், பணத்தை சம்பாதிக்க மட்டும் கற்கும் கல்வி என இவைகளின் பயன்தான் என்ன?

எந்தவொரு மகத்தான வளர்ச்சியும் மனிதகுல மேம்பாட்டுக்காக எனில், இவைகளினால் உண்மையான அமைதியும், ஆனந்தமும் இன்று மனித குலத்திற்குக் கிடைத்திருக்கிறதா?

மேல்தட்டு, நடுத்தர, கீழ்த்தட்டு என்றும், மதம், இனம், மொழி என்றும் பாகுபாடின்றி சமதர்மமாக, நம்மை வளைத்துக் கொண்டிருக்கும் அருவருக்கத்தக்க பல கொடுமையான நோய்களின் புகலிடமாக, முதலிடமாக திகழும் நம் நாடு, அழிவின் எல்லைக்குச் சென்று கொண்டிருப்பதை நாம் அறிவோமா? அறிந்திருந்தால் அதுவும் ஒரு - பேரழிவிற்குப் பிறகு, எழுச்சியோடு பிறக்கும் புதிய யுகத்தில், புதிய உதயத்தில் நம் பண்பாடுகளும், ஒழுக்கங்களும் உயிர்பெற்று எழும். அன்று, தெளிந்த ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் நடைமுறை வாழ்விற்கு ஏற்புடையதாகவும் இருக்கும்.

அன்று நல்ல இலக்கியங்கள் துாசு தட்டி எடுக்கப்படும். மனித குலம் அதை இதயத்தில் பதித்து புதிய பாரதத்தை உருவாக்கும்.

சத்தியம் என்றும் அழிவதில்லை
உண்மைக்கு என்றும் தோல்வியில்லை.

நல்லவைக்கு என்றும் சாவில்லை

எனவே நல்ல இலக்கியங்களை உருவாக்கிக் காத்திருப்போம். புதிய பாரதத்தைக் காண...

வெ. இரா. நளினி

புது வெளிச்சம்

ᗍ vii