பக்கம்:புது வெளிச்சம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரம்மம் அல்லது சிவம் எனும் தெய்வத்தின் உண்மை இதுவேதான். சொற்கள் வேறுபடினும் பொருள் வேறுபடாது. கடவுளைப் பற்றி விளக்கிய நிலைபாடு இது. பூ, புவ. சுவ மஹா, ஜன. தப, சத்திய எனவும். வேறு ஒரு உபநிசத்து விளக்குகிறது. சம்ஞானம், ஆக்யானம், விக்ஞானம் - பிரக்யானம் எனவும் விளக்குகிறது மற்றொரு உபநிசத்து.

விஷ்ணு, சிவன், சூரியன், அம்பிகை கனநாதன் எனும் ஐந்து தெய்வங்களை நம்பங்குக்கு ஒதுக்கிய அந்தப் பழைய சங்கராச்சாரியார் சிவன் என்கிற தெய்வத்துக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நம்மவர்கள் சிவனை தினமும் தியானம் செய்ய ஒரு மந்திரத்தையும் தானே பிரசவித்து, அதாவது உண்டுபண்ணிக் கொடுத்தார். அந்த மந்திரத்திலும் ஒருதந்திரம் இல்லாமலில்லை. வாசகர்களே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளலாம்.

'அகம் பிரம்மாஸ்மி' எனும்போது, நானே பிரம்மமாயுள்ளேன் என்பது பொருளாயின், தியானம் நம்மைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். இதுதான் நியாயம் ஆனால் இவர் என்ன செய்தார்? எனின், சத்து, சித்து, ஆனந்தம் - சிவம் என்ற மந்திரத்திலுள்ள சத்து எனும் பகுதியை கத்தரித்து வைத்துவிட்டுச் 'சிதானந்த ரூப சிவோஹம்' எனச் செய்து கொடுத்தார். இதன் பொருள்; 'அறிவும் ஆனந்தமுமே ஒரு உருவாகியுள்ள சிவன் என் அகத்தில் உளன்' என்பதாம்.

சத்தியமில்லாத அறிவும் ஆனந்தமும் எத்தகையனவாயிருக்கும்? உப்பு, காரம், புளி இம்மூன்றும் கனருசிகள். வெறும் கஞ்சிவைத்து உப்புமாத்திரம் கலந்து மனிதன் அருந்தலாம். கூட ஒரு இளம் பச்சைமிளகாய் இருந்தால் மேலும் கொஞ்சம் குடித்துவிடலாம், ஆனால், உப்பே இல்லாது காரமும் புளியும் வைத்துக் கொண்டு கஞ்சியை எந்த மனிதனாலும் குடிக்க முடியாது. அவ்வளவும் வீண் இல்லையா?

இதுபோன்று சத்தியமில்லாத - வெறும் அறிவும் ஆனந்தமும் எப்படிச் சிவனாக முடியும்? அதை அகத்தில் தெய்வம் என வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் இந்த மந்திரத்தை நூறு தரம் வாயில் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதனால் நேரம் வீணானது

புது வெளிச்சம்

79