பக்கம்:புது வெளிச்சம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17




சுயாதீனம்

'அறிய வேண்டியதனைத்தையும் அலசி ஆராய்ந்தறிவதே என்றுடைய ஆர்வத்திற்குரிய இடைவிடாத செயல். இந்தச் செயலில் மற்றவர்களையும் ஈடுபட வைப்பதே என் நிரந்தர உத்தேசம்’!

ஒரு காலத்தில் ஏதென்சு நகர மூடக் கோடீசுவர்களால், தன் கையாலேயே விசமருந்துமாறு செய்து கொல்லுவித்த ஞானி சாக்ரடீசின் வாக்கியம் இது. இதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான வாக்கியம். நல்ல வாக்கியங்கள் என்பன உலகில் ஆயிரமாயிரமாக இருக்கின்றன. நானறிந்த அந்த நல்ல வாக்கியங்களில் மிகமிக நல்ல வாக்கியமாக இதை நான் கருதுகின்றேன். மேற்கொண்டொழுகவும்

செய்கிறேன். காரணம் என் வாலிபவயதிலிருந்து நான் சுயாதீனனாக வாழ்ந்து வருவதுதான். 'அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்-

புது வெளிச்சம்

➢ 83