பக்கம்:புது வெளிச்சம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செல்வம் பூரியர் கண்ணுமுள' என்ற குறள்பா அழுத்தமாக அப்போதே என் இதயத்தில் ஆழப்பதிந்திருந்தது. வாய்ப்புகளிருந்தும், செல்வம் சேர்க்க நான் அறியாதவனாகவே இருந்தேன். இந்தக் குறள்பா, பொருள் செல்வத்தைச் தேடும் முயற்சியில் என்னை அதிகமாக ஈடுபடாமல் செய்து காப்பாற்றியது. உலோபி, என் வெறுப்புக்குள்ளானான். மனிதப் பிறப்பு எத்தகையது வாழ்வு எனும் சொல்லின் பொருள் என்ன என்பதையே அறியா மூடனைக்கூடப் பொருள் மிகப்பெரிய மனிதனாக எண்ணச் செய்து விடுகிறது. பழங்காலத் தமிழர் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் அரசர்களும் அறிவினமானவர்களாக இருந்துள்ளனர் என்பது அறிஞன் கண்ணுக்குப் புலப்படாமலிருக்காது. சுயாதீனமாக அறிவதறிந்து இந்த மண்ணை ஒருவன் ஆட்சி செய்திருந்தால் இந்த நாட்டில் அந்நிய ஆட்சி ஏற்பட்டே இருக்காது என்று நான் நிச்சயமாகக் கூறத் துணிகிறேன்.

‘சுயாதீனம்’ எனில் தன்னைத் தானறிந்த நிலைதான் அது. தன்னையறிந்தவன் தலைவனை (கடவுளை) அறிந்தவனாகிறான். கடவுளை அறிந்த ஒரு அரசன் கோயில் கட்டத் துணையாகவேமாட்டான். தோத்திரம் செய்யமாட்டான். அவன் கல்வி பயிலும் பள்ளிகளை மட்டும் நாட்டில் கட்டி மக்களை அறிவு நிலைக்குக் கொண்டு வந்திருப்பான். இத்தனை சாதி பேதங்கள் தோன்றியிருக்காது. சமத்துவம் கெட்டிருக்காது. சகோதரத்வம் செத்திருக்காது. சுதந்திரம் இழந்திருக்க மாட்டோம். சாதி இரண்டொழிய வேறில்லை என்ற இந்தச் சிறிய தமிழ்மொழி கூட அறியாது, ஒங்காரத்தின் உண்மை அறியாது, ஆங்காரத்திற் காட்பட்டவர்கள், வழிதவற வைத்தவர்களை, புரோகிதன் - முதன்மந்திரிகளாக வைத்துக்கொண்டு ஆட்சி செய்த மாபெரும் தவறு காரணமாய் மக்கள் பரவலாகச் சுயாதீனம் மெல்ல மெல்ல மறந்து காலப் போக்கில் இழக்கவும் நேரிட்டது.

சுயாதீனன் எல்லாம் அறிந்தவனாகிறான். ஆம் உபநிசத்து இப்படித்தான் சொல்லுகிறது. 'பிரம்ம வித்யாம் சர்வ வித்யா பிரதிஷ்டாம். எனின், பிரம்ம வித்தையில் எல்லா வித்தைகளும் வைக்கப்பட்டுள்ளது என்பது பொருள். இந்தப் பிரம்ம வித்தையென்பது தான் என்ன? அது அப்படி ஒன்றும் மலையைத் தோண்டி

84

கவிஞர் வெள்ளியங்காட்டான்