பக்கம்:புதையலும் பேழையும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கில்லை. ஆனால், ஒருசிலர் இலக்கியச்செய்தி எவ் விதத்திலும் வரலாற்றுக்குத் துணையாக அமை யாது’ என்று வாதிடவும் செய்கின்றனர். இப்படிப் பட்டவர்களை நினைத்துத்தான், இலக்கியங்களில் காணும் நகரங்களைப் பற்றிக் குறிப்பிட்ட சர். சிவசாமி ஐயர் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறினார்:

“It would be absurd to suppose that such

description of Cities and Towns in literature

were not founded on a solid substratum of truth”

தமிழ் இலக்கியங்களில் வரலாற்றுக்குப் பெருந்துணையாக அமையும் தன்மை கொண்டது சிலப்பதிகாரம். ஆனால், அதில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள் நாம் அதை அப்படியே ஒப்புக்கொள் வதற்குத் தடையாக நிற்கின்றன. முடிச்சவிழ்க்கும். சொல், இந்த வகையில் ஏற்படும் பல சிக்கல்களை, நாம் மேலெழுந்தவாரியாக மட்டும் பார்க்காமல், சற்று ஊன்றி, ஆழ்ந்து, நுணுகி நோக்கும் பொழுது, தெளிவு காண்பது இயன்ற ஒன்று என்ற பாடத்தை நமக்குப் புகட்டுகின்றது. அது ஒரு முடிச்சை மட்டும் அவிழ்க்கவில்லை. பல முடிச்சுகளை அவிழ்க்க ஒரு பாதையைக் காட்டுகிறது. சிலப்பதிகாரம் போன்ற இலக்கியம் வரிக்கு வரி வரலாறு என்று யாரும் கூற மாட்டார்கள். அப்படியாயின் அது ஒர் உயர்ந்த இலக்கியமாக அமைந்திருக்காது. ஆல்ை; அதில் கணிசமான வரலாற்று உண்மைகள் கிடைக் கின்றன என்பதையும் மறுக்க முடியாது. எனவே, இவற்றில் காட்சி எது, கற்பனை எது என்று பிரிப்பு