பக்கம்:புதையலும் பேழையும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 81

தொண்டைநாட்டுத் திருமயிலை எனப்படும் சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் வாழ்ந்த இடம் என்று, செவிவழிச் செய்திகொண்டும், திருவள்ளுவர் கோயில் அங்குஎழுப்பப்பட்டிருப் பது கொண்டும் குறிப்பர், இவைகொண்டு வெளிநாட்டறிஞர் சீகன்பால்கு என்பார் தூயர் தாமசு வாழ்ந்த இடத்தில் திருவள்ளுவர் வாழ்ந்தார்' எனக் குறித்தார்.

திருவள்ளுவர் தம் வாழ்வைக் குறிக்கும் தொடர்புடைய திருவள்ளுவமாலை, ஞானாமிர்தம், கபிலரகவல், திருவள்ளுவர் கதையைக் கூறும் வெண்பாக்கள், சில சிற்றிலக்கியத் தொடர்கள், தனிப்பாடல்கள் முதலிய யாவும் சொல்லமைப்பாலும் மரபு வேறு பாட்டாலும் பல ஐயங்களை எழுப்புவன. இவற்றை மேலும் ஆய் வதால் ஐயங்கள் வைரம் பாய்ந்துகொண்டே போகின்றன. இவை வழங்கும் கருத்துகள் ஒன்றற்கொன்று வேறுபாடு கொண்டவை: மாறுபாடு உடையவை; முரண்பாடு அமைந்தவை. எனவே, இவற்றிலிருந்து கொள்ளப்படும் சான்றுகள் ஈடு கொடுத்துநிற்பன. ஆகா.

‘மண்டல சதகம்’ என்னும் பெயரில் பல நூல்க்ள் உள்ளன. அவை அவ்வப்பகுதிகளில் வாழ்ந்த பெருமக்களது சிறப்பைச் சுட்டிக்காட்டி அவ்வப்பகுதிகளின் பெருமை பேசுபவை. அவற்றுள் எம் மண்டலத்திலும் திருவள்ளுவர் வாழ்ந்ததாகக் குறிப்பில்லை. பாண்டி மண்டல சதகத்திலும் குறிப்பில்லை.

பாண்டி மண்டல சதகம்,

"வள்ளுவர் மாலை பகர்ந்தாரும்

பாண்டி மண்டலமே' -எனத் திருவள்ளுவ மாலையைப் பாடியோரைப் பாண்டி மண்டலத்தோராகக் குறிக்கின்றது. ஆளுல், திருவள்ளுவரை அம்மண்டலத்தாராகக் குறிக்கவில்லை. திருவள்ளுவர்தம் பொன் மொழியைப் போற்றி எடுத்தாண்டு2 வள்ளுவர் பெயரையும்

1. பா, ம, ச - 4. 2 “உழுதுண்டு வாழ்பவ ரே வாழ் பவர்மற் றுலகிலுள்ளார்

தொழுதுண்டு பின்செல் பவரென்று வள்ளுவர் சொன்னவரம் பழுதின்றி யேகம்ப னாரேர் எழுபது பாடியவர் - - வழுவொன் றிலாதவண் வேளாளர் பாண்டியன் மண்டலகே' - - - ज्न् -Im , u), * ; ३ புே, 6 ... • * : * . . .