பக்கம்:புதையலும் பேழையும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. புதையலும்

குறிக்கும் இச்சதகம் அவர் வாழ்விடமாகப் பாண்டி மண்டலத்தைக் குறிக்காதது ஆழ்ந்து நினைத்தற்குரியதாகின்றது.

இவ்வகையாக எல்லாம் நோக்கித் திருவள்ளுவர் தமிழ் நாட்டிலே பிறக்கவில்லை . வாழவில்லை என்னும் முடிவையோ கொள்வது? இம்முடிவு நகைப்பிற்குரியதாகும்.

திருவள்ளுவரை நாடுவோம்.

வாழ்வியல் பொதுநெறியை நாடி உலக மெல்லாம் சுழன்றாலும் இறுதியில் திருவள்ளுவப் பெருந்தகையை அடைத்து நெஞ்சம் நிறைவு பெறுதல் போன்று அவரது வாழ்விடம் பற்றிய கருத்தைப் பெறவும் அப்பெருந்தகையை நாடுதலே பொருத்த முடையதாகின்றது. அப்பெருந்தகை அருளியுள்ள முப்பாலாம் திருக்குறள் பல்பொருட் பேழை. நாம் பெற்றுள்ள அரும்புதையல்.

அப்புதையலில்,

மணியான சொற்கள் பல தமிழ்தாட்டின் ஒரு பகுதியைத் திருவள்ளுவர் வாழ்விடமாக அடையாளங் காட்டுகின்றன.

சிறப்பான தொடர்கள் சில இப்பகுதியைச் சுற்ற வைக்கின்றன. ஆங்காங்கு தென்படும் நடைமுறைத் தொழில்கள் சில இப்பகுதியைச் சுட்டி நிற்கின்றன.

எந் நூலிலும் அந் நூலாசிரியர் வாழ்ந்த பகுதியில் பெருவழக்காக வழங்கிய சொற்கள், தொடர்கள், மரபுகள் அமைதல் இயல்பு. அவை அவ்வாசிரியர் வாழ்ந்த இடத்தைக் காட்டிக் கொடுக்கும் அடையாளச் சின்னங்கள் ஆகும். அவ்வடையாளச் சின்னங்கள் வழியே முன்னர் இட்ட புள்ளிகளை நீக்கி நிரப்ப முயலலாம். - - -

சொற்கள்.

- இவ்வகை அடையாளச் சின்னங்களில் திருக், ஊருணி, குறளில் பட்டொளி வீசும் சொல் ஊருணி என்னும் சொல். இச்சொல் ஊர்மக்களால் பருகட் படும் நீரைக்கொண்ட நீர்நிலையைக் குறிப்பது. -