பக்கம்:புதையலும் பேழையும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 83

'ஊருண் பொதுநீர் ஊருணி யாரும்'

என்று சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு பொருள் விரித்துக் காட்டுகின்றது. சில்லிடங்களில் கேணியையும் குறிக்கும். மணக்குடவர் இதற்கு 'ஊர்ஊண்கின்ற கேணி' என்றே பொருள் எழுதினார்.

'ஊருண் கேணி"2 .

எனப் புறநானூறும் குறுந்தொகையும் பாடுகின்றன. கிணறு. இச்சொல் செந்தமிழ் நாட்டுச்சொல். செந்தமிழ் கேணி. நாட்டிலும் இராமனாதபுர மாவட்டத்தில் பெருவழக்

- காயுள்ள சொல். இன்றும் நடைமுறைச் சொல்லாக

உள்ளது. அதே நேரத்தில் தமிழ் நாட்டின் பிறபகுதிகளில் வழங்காத சொல் என்பதையும் உள்ளத்தில் கொள்ளலாம். |மதுரைப் பகுதியில் அருகிய வழக்கு.)

ஊருணியைக் கேணி என்று சான்ருேர் குறித்துள்ள தொடர்பில் கேணி என்னும் சொல்லும் சான்றுக்குத் துணையா கின்றது. இச்சொல்லைச் சான்ருகக் கொள்ளும் முன்னர் இது மற்றைய நீர்நிலைகள், நீர் ஊற்றுகள் முதலியவற்றினின்றும் வேறுபட்டது என்பதைக் காணல் நலம்.

'குளம், குட்டை, ஏரி முதலியவை நீர் தேங்கியே தேக்கப்பட்டோ நிற்கும் நீர் நிலைகள். இவை பரந்த நீர்ப்பரப் பைக் கொண்டவை; கரையுடைவை. கேணி என்பது ஆழமாகத் தோண்டப்பட்டு ஆழத்தினின்றே சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு அமைவது. எனவே, ‘கேணி என்பது குளம்போன்றவற்றினின்றும் வேறுபட்டது. ஆல்ை, கேணியைப் போன்று மிக ஆழமாகத் தோண்டப்பட்டுச் சுற்றிலும் சுவர் எழுப்பப்படுவது கிணறு' எனவும் பெயர் பெறும்.

கேணி வேறு; கிணறு வேறு. கிணறு என்பது வட்ட வடிவில் மூன்று, நான்கு முதல் பத்தடி அளவிலும் உள்விட்டம் உடையதாகக் தோண்டப்படுவது. கேணி 15 அடி முதல் 40 அடி வரை நீள அகலங்கொண்டதாக நாற்கோண அமைப்பில்

1 சேந். தி : இடப் பெயர்த் தொகுதி. 2 ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி'-புறம் :392 :18,

.'ஊருண் கேணி உண்டுகற'- குறுந் 899:1, .