பக்கம்:புதையலும் பேழையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

பேழையும்

நீர்வளம் மிக்க சோழநாட்டுப் பகுதிகளில் உழவுத் புழுதி தொழில் முறை வேறு; பிற பகுதிகளில் முறை வேறு. உழவு. இதனை, ஆற்று நீர்ப் பாய்ச்சலால் தொழிற் படுவது * , என்றும், வானத்து மழையை எதிர்பார்த்துத் தொழிற் படுவதுஎன்றும் கொள்ளலாம். பின்னதை வானவாரி' (மானாவாரி) என்பர். -

ஆற்றுநீரை வயலில் தேக்கிப் பின் உழுதல் முன்னது. பின்னது மழையால் பதப்பட்ட நிலத்தை உழுதல். திருவள்ளுவப் பெருந்தகை,

'தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்' என்கின்றார். ஒரு பலம் மண், கால் பலம் ஆகுமாறு உழுது கதிரவன் ஒளியில் காயவிடல் வேண்டும்’ என்பது திருவள்ளுவரது கருத்து. இதனைப் புழுதி உழவு என்பர். அதனிலும் காயவிடும் குறிப்பு உன்னத்தக்கது.

நீர்வளம் மிக்க சோழநாட்டு மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களில் சில பல பகுதிகளிலும் நீர் பாயும் நிலம் உண்டு; வானவாரிப் பகுதியும் உண்டு, முன்னதே பெருகியது; பின்னது அருகியது. முகவை மாவட்டப் பெரும்பகுதி-ஏன்-முழுப்பகுதி என்றும் கூறலாம், புழுதி உழவையே மரபாகக்கொண்டது. இதனைக் கூர்ந்து நோக்குங்கால் திருவள்ளுவப் பெருந்தகையை முகவை மாவட்டத்தோடு இணைத்துக் காணமுடிகின்றது.

இத்துடன் உழவுத் தொழிலில் படிப்படியாகச் செய்ய வேண்டிய பணிகளைத் திருவள்ளுவர் பட்டியலிட்டு வலியுறுத்தும் பாங்கும் கவனத்திற்கொள்ள வேண்டியதாகின்றது. அதனை,

'ஏரினும் நன்றால் எருவிடுதல்; சுட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு” என்னும் குறளில் காண் கின்றோம். இதன்படி முதலில்,

ஏர் உழுதல், எரு இடல், (விதைத்தலும் முளைத்தலும் மழை

- நீரால் நிகழும்)

1 குறள் : 1037 2 குறள் : 1088