பக்கம்:புதையலும் பேழையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களை எடுத்தல், நீர் பாய்ச்சல், (இறைவை நீரால்) காவல் காத்தல்

-எனப் படிப்படியாகக் குறித்துள்ளார். இச் செயல்முறை வரிசையை உற்று நோக்கினால் மேற்குறிக்கப் பட்ட புழுதி உழவுக் கருத்து வலுப்பெறுகின்றது.

மேலும், அக்குறளிலேயே "பிடித்து எருவும்” என்று பிடி எருவைப் பிடி அளவில் குறித்திருத்தல் நோக்கத்தக்கது. எரு. சோழநாடு போன்ற பகுதிகளில் எருவைக் குவித்துக் கொட்டிப் பின்னர் வாரி வாரிப் பரவ விடுவதும், கூடை யில் அள்ளிக் கொட்டுவதும் பழக்கமாக உள்ளது. பிடி பிடி யாகத் தூவும் முறை முகவை மாவட்டத்தை நினைவில் நிறுத்து கின்றது. முகவை மாவட்டத்தைச் சார்ந்த திருநெல்வேலி மாவட்டத்தையும் நினைவுறுத்துகின்றது.

இம்முறை வட ஆர்க்காடு, தென்னார்க்காடு மா பட்ட

பகுதிகளிலும் பெருமளவில் கையாளப்படுவதுண்டு. ஆனால் அப்பகுதிகள் தேர்ந்த விளை நிலங்களாக ஆக்கப்பட்ட காலத்தை எண் ணிப் பார்க்கவேண்டும். அப்பகுதிகள் மக்கள் வாழும் நாட்டுப் பகுதிகளாகச் சங்க கால அளவில் மாற்றப்பட்டவை. இக்கருத்தை, கரிகாலன் காடுகெடுத்து நாடாக்கியதையும், அதற்கு முன்னர் இராமாயண, பாரத காலங்களில் இவை காட்டுப் பகுதிகளாகக் குறிக்கப்பட்டமையும், இன்றளவும் அவ்வப் பகுதிப் பெயர்கள் 'காடு என்னும் சொல்லோடே வழங்கப்படு கின்றமையும் கொண்டு அங்கெல்லாம் உள்ள உழவு முறையை அடிப்பட்ட பழைமையாகக் கொள்ளுதற்கு இயலவில்லை.

முகவை மாவட்டம்.

எனவே, உழவுத் தொழில் முறையை அறிவிக்கும் பாங்கில் பெரும் அளவில் முகவை மாவட்டத்தைத் திருக்குறள் அடையாளங் காட்டி நிற்பதை அறிய முடிகின்றது.

இங்கே குறிக்கப்பட்ட

சொல்லாட்சி, பெயர்த்தொடர்கள், - தொழில் முறைகள் கொண்டு கூர்ந்து