பக்கம்:புதையலும் பேழையும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 恕

பேழையும் - 91.

நோக்கினால் திருவள்ளுவப் பெருந்தகை வாழ்ந்த இடத்தை

அடையாளங் காண முடிகின்றது.

அவ்விடத்தைப் பெருஞ் சுற்றெல்லையாகக் கோடிட்டுக் காட்டினால் அது பாண்டிய நாட்டகமாகவும், அதனையும் கூர்ந்து நோக்கிச் சுருக்கினால் முகவை மாவட்டமும், அதனை, அடுத்துள்ள திருநெல்வேலி மாவட்டமும், மதுரை மாவட்டத்தின் சிறு பகுதி கொண்டதாகவும் அமையும். இக்கருத்திற்கு மேலும் சில மரபுகள் இயைந்து வருகின்றன. அவையும் ஆராயப்பெறின் கருத்து உறுதிபெறும். -

இக்கட்டுரை திருவள்ளுவரது வாழ்விடத்தை அறிய அவா வும் முனைப்புக் கட்டுரையே. பல்கிப் பெருகியுள்ள திருக்குறட் கருத்துகளைத் தொடர்ந்து ஆராயவேண்டும். அவ்வப்பகுதி யில் வாழும் புலவர் பெருமக்கள் இவ்வாறு இயைந்து வருட வற்றைக் கூர்ந்து காணவேண்டும். மிக விரிவாகவும் ஆழமாக வும் கண்டறிய வேண்டிய ஆய்வாகும் இது. ஆயும் போதில் மாவட்டப் பற்றிற்கு இரையாகிவிடக் கூடாது. கூர்த்த ஆய்வு களால் வாழ்விடப்பகுதியின் சுற்றெல்லையைச் சுருக்குவோமாயின் திருவள்ளுவர் வாழ்ந்த நேரான இடத்தையே அடையாளங் கண்டுவிட முடியும்.

இவ்வாய்வினால், திருவள்ளுவப் பெருந்தகையைக் கானும் பேற்றைப் பெற இயலாதெனினும், அவர்தம் வாழ்விடத்தையா வது காண்கின்றோம் என்று அமைதிபெறுவது மட்டுமன்று, பல சொற்களுக்கும் தொடர்களுக்கும் மரபுகளுக்கும் தெளிந்த பொருளைப் பெறவும், அவற்றை வாழ்வியலில் நடைமுறைப்படுத்தி வாழ்வைச் செம்மை செய்து கொள்ளவும், உலகினர்க்கு எடுத் துரைத்து வாழ்வித்து இன்புறுத்தவும் பயன்படும்.

அவற்றைவிட, தவறானசொற்பொருள்களால் திருவள்ளுவப் பெருத்தகை கருதிக் கூறிய கருத்தை நழுவ விடாமல் காக்கவும் நேரும். - -

தூங்குதல்’ என்பதற்குப் பிற்காலப் பொருளாகிய கண் அயர்தல்' என்பதைக் கொண்டால், -