பக்கம்:புதையலும் பேழையும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியது அன்று.

நாகப்பட்டினத்திற்கு அண்மையில் மஞ்சட்கொல்லை என்றொரு சிற்றுார் உள்ளது. அங்கு வாழ்பவர் நண்பர் திரு தி. சாமிநாத முதலியார். அவர் மனத்துக் கண் மாசிலாதவர். செல்வத்தில் பெருந்தகையார். 'பண்பறிந்தாற் றுபவர். பொய்யா விளக்கினர். மெய்ப்பொருள் காணும் அறிவு டையார். கருமம் சிதையாமல் கண்ணோடு வார். 'அளவறிந்து வாழ்' பவர். இவற்றால் நிறைவாழ்வினர்.

ஒரு முறை உரையாடும் போது குறள் நெறிகள் கடுமையானவை. என்றார். இஃது அவர் தம்மை மறந்து கூறியது.

அதுபோது குறள்நெறி கடியது அன்று; எளியதே, எனச் சில காட்டினேன். இதனை விளக்கமாக எழுத வேண்டும் என்னும் எண்ணம் பொதிந்தது. -

பெங்களுர்த் தமிழ் இலக்கிய மன்றத்தார் தம் ஆண்டு விழாவிற் பேச அழைத்தனர். 'எளிதிலும் எளிது' எனத் தலைப்பெழுதினேன். பட்டிமன்ற நடுவராக்கி மலருக்குக் கட்டுரை வேண்டினர்.

எளிதிலும் எளிது எழுத்தாயிற்று

ஆண்டுவிழா மலர், பெங்களுர்த் தமிழ் இலக்கிய மன்றம். தி. ஆ. 2000: கி. பி. 1969.