பக்கம்:புதையலும் பேழையும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 புதையலும்

அதனையும் மேலும் பெருக்கி உரித்த வாழைப்பழச் சோம்பேறி -என்றமையும் இணைத்து உன்னத் தக்கது.

இரண்டு கனிகளை ஒவ்வொரு நலத்தைச் சிறப்பிக்க உவமையாக்கியவன் வாழைக்கனியை மட்டும் ஏன் ஒர் எள்ளற் சிறப்பிற்கு உவமையாக்கினான் என்பதை எண்ணின் மாந்தர் இயல்பின் ஒர் உண்மை புலப்படும்.

முக்கணிகளையும் உண்டு சுவை காண்பதற்கு நாம் கையாளும் செயல்களை நோக்குவோம்:

பலாக்கனி அளவிற் பெரிது; சுமை உண்டு. மேலும் முள் உண்டு. இவை இரண்டையும் தாங்கிச் சுமந்து கொணர்ந்தால் எளிதிற் பிளக்க முடியாத தடித்த தோல் உண்டு. தனிக் கருவி கொண்டு முழு வலுவுடன் பிளந்த பின்னர் வலிய திரள் கோது உண்டு. அத்துடன் ஒட்டும் பால் உண்டு; சக்கை உண்டு; உள் கோது உண்டு; கொட்டையும் உண்டு. இவற்றை எல்லாம் தாண்டிய பின்னரே சுளையை உண்டு சுவைக்கலாம். சுளையின் சுவை பெருமுயற்சிக்குப் பின்னர்தான் கிடைக்கும்.

மாங்கணிக்கு இத்துணைப் பெருமுயற்சி வேண்டுவதின்று, மேலே தோலுண்டு. பக்குவமாக உண்போர் அதனை நீக்கினால், சிலவற்றில் உள்ளே நார் உண்டு; புளிப்பும் உண்டு. இவை இல்லையென்று கண்டாலும் கொட்டை உண்டு. கொட்டை தள்ளின் சுவை உண்டு. மாங்கனியைச் சுவைப்பதில் பலாக்கனி யினும் முயற்சி குறைவு. -

வாழைக்கணிக்கு மேல் தோலுண்டு. தோலை நீக்கினால் சுவை கண்டு மகிழலாம். முன்னிரண்டு கணிகளிலும் முயற்சியைக் குறைவாகவே கொள்வது வாழைக்கணி.

இவ் எளிமையைக் குறிக்கொண்டே - எதனையும் எளிதாகவே நுகர விரும்புவோரைக் கருதியே - சோம்பல் மேல் ஏறிக்கொண்டிருக்கும் சோம்பேறிக்கு உவமையாக்கப்பட்டது வாழைக்கனி, தான் சோம்பல்மேல் ஏறும் முயற்சியையும் விடுத்துத் தன்மேல் சோம்பலை ஏறவிட்ட சோம்பேறிக்கு உரித்த வாழைப் பழத்தினை உவமையாக்கினான் தமிழன். ‘. . . . .

இதன்கண் ஒளிந்திருக்கும் உண்மை மாந்தன் எதையும்

எளிதிற் சுவைக்கும் இயல்புடையவன்; எளிதிற் பயன்கொண்டு மகிழ விரும்புபவன்'- என்பதே, *