பக்கம்:புதையலும் பேழையும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் i01.

அவர் : "சும்மா இரு' என்றார்.

இதனையே செய்வேன். செய்வதற்கென்ன இருக்கிறது? சும்மர் இருப்பேன். நல்லதே சொன்னீர் அடிகளே! நன்றி, வருகின்றேன்.

துள்ளிக் குதித்தவாறே இஃதன்றோ எளிதான அறம்

சும்மா இரு.

எளியவன் குதிப்போடு தெருவழியே நடந்தான் எதிரே கோவில் அறங்காவலர் ஒருவர் வந்தார். அவன் குதிப்பைக் கண்டு வியந்தார். உசாவினார் :

தம்பி மகிழ்ச்சிக் கடலிலே மிதந்தபடி போகிறாயே..! என்ன கண்டாய்?

எளி : எளிதான அறம் செய்யக் கண்டுகொண்டேன். அதற் காகப் போகின்றேன். -

அறம் : என்ன அது? யானும் அறியலாமோ?

எளி : சும்மா இருப்பது.

அறம் : அப்படியா? அவ்வாறு இருக்கும் ஒருவரைத்தான் நீண்ட நாள்களாகத் தேடிக் கொண்டிருக்கின்றேன். என்னொடு வா! எங்கள் கோவில் கல்வெட்டு ஒன்றில் கோவிற் பணி யாளர்க்கு வழங்குதற்குரிய சோற்றுப் பட்டைகள் பற்றி ஒரு பட்டியல் உள்ளது. அப்பட்டியலில் திருப்பதியம் ஒதுவார்க்குப் பத்துப் பட்டைகள் என்று தொடங்கி இறுதியில் 'சும்மா இருப்பவருக்கு மூன்று பட்டை” என்று இருக்கின்றது. இதுவரை அப்படி ஒருவர் கிடைக்காமை யால் கவன்று கொண்டிருக்கின்றேன். வந்து கோவில் மண்டபத்து இடைநாழியில் அமர்ந்து சிம்மா இரு. உனக்கு அறம் செய்ததாகவும் ஆகும். மூன்று பட்டை சோறும் கிடைக்கும். கல்வெட்டை நிறைவேற்றிய அறமும் உன்னைச் சேரும். நிறைவேற்றிய மகிழ்ச்சிக்கு எனக்கு உதவியாகவும் அமையும். வா என்னுடன்! எளியவன் துடிப்போடு பின்தொடர்ந்தான். எளியவனை அழைத்துப்போய்க் கோவிலின் இடைநாழியில் அமர வைத்தார்