பக்கம்:புதையலும் பேழையும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

புதையலும்

அறம் : தம்பி பகல் 12 மணிவரை இங்கே உன் அறத்தைச்

செய்! சும்மா இரு யான் வந்து ஆவன செய்வேன்.

எளி : அவ்வாறே அறம் செய்வேன். சும்மா இருப்பேன். தாயு

மானவரோடு தங்களுக்கும் நன்றி.

அறங்காவலர் போனார். எளியவன் அமர்ந்தான். மணி 12 ஆயிற்று. போனவர் வந்தார்.

அறம் : தம்பி சும்மா இருந்தாயா?

ரி ஆம்,

இருக்கின்றேனே! நீங்களுந்தான் பார்க்கின்றீர்

களே. ஒன்றுமே செய்ய வில்லை. எழுந்து நிற்கவும் இல்லை. அப்படியே சும்மா அமர்ந்தே இருக்கின்றேன்.

அறம் : இந்தப் பக்கமாக எவரும் போனார்களோ?

Grof ៖

அறம் :

எளி :

அறம்:

எவர் எவரோ போனார்கள். குழந்தைகள் போயின. குமரிகளும் போயினர். குமரர்களும் போயினர். பெரியவர்களும் போனார்கள். -

போனார்களா? பார்த்தாயா? ஏன் பார்த்தாய்? நீ சும்மா அன்றோ இருக்க வேண்டும்? கண்ணால் சும்மா இருக்கவில்லை நீ. போகட்டும். ஏதேனும் கேட்டாயோ?

பெருவங்கியம் இசைக்கக் கேட்டேன். தேவாரம் இனி மையாக இசைக்கும் போது கேட்காதிருக்க முடியுமா என்ன? சுவைத்துக் கேட்டேன். தொடர்ந்து நானும் பாடிப் பார்த்தேன்.

காதால் கேட்டாயா? செவியால் நீ சும்மா இருக்க வில்லை. பாடிப்பார்த்ததால் வாயாலும் சும்மா இருக்கத் தவறிவிட்டாய். இஃதோ வேட்டியின் நூலை உருவிப் போட்டிருக்கின்றாய். அழுக்கு உருண்டை திரட்டிப் போட்டிருக்கின்றாய். மெய்யாலும் சும்மா இருக்க வில்லை. தம்பி! மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாலும் நீ சும்மா இருக்க

வில்லை. அவற்றையெல்லாம் முழுமையாகச் செயல்

புரிய வைத்துள்ளாய். ஐம்பொ றிகளையும் . அடிக்கிச