பக்கம்:புதையலும் பேழையும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும்

103

நினைவையும் ஒடுக்கி ஒரு நிலைப்படுத்தி இருப்பதே கம்மா இருப்பதாகும். தாயுமானவப் பெரியார் சொன்ன அறம் பொருள்கொண்டது. நீ அதன்படி ஒழுகவில்லை. எழுந்து ஒடு உனக்குச் சோற்றுப் பட்டை வழங்கக் கூடாது. எழு; போ!

விரட்டினார் அறங்காவலர். அலறிப் புடைத்து எழுந்தவன் மனத்தைத் துண்டிவிட்டான். திருவள்ளுவப் பெருந்தகை காலில்

விழுந்தான்,

திருவள் :

Grទារំា :

திரு :

எளி :

திரு :

எளி :

மீண்டும் திருவள்ளுவர்.

"தந்தையே! தாங்கள் குறித்த அறமே எளிது. உள்ளத்தில் குற்றம் இல்லாமல் ஒழுகும் அறமே செய்ய விழைகின்றேன், அஃதே சிறந்தது' என்றான்.

மகனே! பிற எல்லாம் வெளி ஆரவாரச் செயல் களாகும். அறம் ஆகா. உணர்ந்த மகனே, நீ வாழ்க!

அறிந்தேன் தந்தையே! அவ்வாறே செய்வேன். வரு கின்றேன். நன்றி; வணங்குகின்றேன்.

மகனே, சற்றுநில்! ஒன்று வினவாமல்போகின்றாயே? 'மனக்குற்றம் என்றால் என்ன என்று நீ வினவு வில்லையே?

ஆம், அதனையும் அருளுக!

பிறர் ஆக்கம் கண்டபோது பொறாமை கூடாது. அப்பொறாமை வழி எழும் அவா கூடாது. அவ்வவா ஏதுவாக மூளும் சினம் கூடாது. அச் சினத்தால் வரும் இன்னாச் சொல் கூடாது. இவை நான்கும் நீங்குவதே உண்மை அறம் . இந்த ஏட்டைப் பெற்றுக்கொள். மேலும் சில வழிகளும் பயன்களும் உனக்குக் கிடைக்கும். சென்றுவா மகனே!

வணங்கி அமைகின்றேன், தந்தையே!

1 'அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழ்க்க வியன்ற தறம் - குறள் : 85