பக்கம்:புதையலும் பேழையும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 - புதையலும்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்; ஆகுல நீர பிற' "

இக்குறள் মগঞ্জ உள்ளத்தை நிறைவாக்கியுள்ளது. அவ்வாறே நடப்பேன். -

திருவள்ளுவப் பெருந்தகை எளியவனை ஒரக்கண்ணால் பார்த்து மகிழ்ந்தார். வாழைப்பழச் சோம்பேறிக்கு வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று எளிதான அறத்தைப் புகுத் தினார். அரிதானதை எளிதாகக் சுட்டிய அச்சான்றோர், இன்றும் நம்மிடையே கருத்தால் நிலைத்துள்ளார்.

எளிமையில் எளிமையாய், அருமையின் அருமையாய்த் திகழ் வதன்றோ திருக்குறள்.

நபிபெருமான் எளிமை,

மக்களை நல்வழியில் வாழவைக்க விரும்பிய பெரியோர் எவரும் எவ்வகையிலும் அதனை நிறைவேற்றவே முனைந்துநின்ற னர். தமது விருப்பத்திற்கு மாறானவற்றையும் ஓரளவில் விட்டுக் கொடுத்தேனும் நன்னெறிகளை இயன்ற அளவில் கடைப்பிடிக்கச் செய்வதே சான்றோரது நோக்கமாகும்.

நாடு, காலம் வேறுபட்டிருப்பினும் FTrGprf எவரும் ஒர் இழையோட்டமான உணர்வைக் கொண்டிருந்ததை நாம் உணர முடிகின்றது.

நபிபெருமான் முகம்மது சல் அல்லாகு வ சல்லம் அவர்கள் விட்டுக் கொடுத்தும், வாய்ப்புகளை இயைபாக்கியும்அறநெறிகளைக் கடைப்பிடிக்கச் செய்யும் மனப்பாங்குடையராக விளங்கினார்.

அரபிய நாட்டு மக்கள் இறைச்சி உணவை இன்றியமை யாததாகக் கொண்டவர்கள். பாலைநிலம் வெப்ப நாடாகையால் பயிர்ப்பச்சை உணவை - காய்கறி உணவைப் பெரிதும் பெறும் வாய்ப்பில்லாதவர்கள். கோழி, ஆடு, குதிரை, ஒட்டகம் முதலிய வற்றின் இறைச்சி அம்மக்களுக்கு இன்றியமெய,து வேண்டப்படும்

உணவுப் பொருள்கள். இவ்வுணவு முறை அருட் பாங்கிற்கு

1 குறள் : 34