பக்கம்:புதையலும் பேழையும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

அத்துடன் மாற்று கூறும் முறையையும் கவனத்திற் கொண்டுள்ளார்.

'திருவள்ளுவப் பெருந்தகையே ஆயிரம் வேண்டா! அத்துணையும் கேட்க நேரமேது? செய்ய வலிமையேது? ஒன்றேஒன்று கூறுக!' -என்று கேட்டார்போலும்ஒருவர்.

'ஒன்றாக நல்லது கொல்லாமை' -என்றார். கேட்டவர் இசைந்திருப்பார். கொலை கொடியது தான். அஃதொன்றைச் செய்தால் போதுமன்றோ என்று கேட்டவர் கருதுவதாகத் தோன்றிற்று.

'அத்துடன் மற்றொன்றை ஒன்று சேர்த்துக் கொள்ளேன். மற்றொன்றும் அதனைச் சார்ந்ததுதான். வேறு அன்று.”

' பொய்யாமை நன்று' என்றார். . கேட்டவர் சிறிதளவில் முகஞ் சுளிக்கக் கண்டு, 'ஏன்? மற்றொன்று கடுமையாகப் படுகின்றதோ என்றார். பின் என்ன? பொய் சொல்லாமை என்பது வாழ் வியலில் சற்றுகடுமைதான். எல்லாவற்றிலும் உண்மையே சொன்னால் என்ன ஆவது?

'ஏனப்பா? சொன்னாலென்ன? உண்மை ஒன்றும் கடுமை அன்றே தீமை இல்லாத சொல்வதுதானே உண்மை? "ஆம், ஆனாலும் உலகியலில் எல்லாவற்றிற்கும் ஒத்து வராது.

'ஒத்துவராத இடத்தில் பொய் சொல்லேன்.' பொய் சொல்லலாமோ? 'சொல்லலாம். உலகியலில் நல்ல நன்மைஉண்டாகும் என்றால் பொய் சொல்வதே உண்மை பேசுவதுதான்.

"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்'

-என்றார். . இவ்வகையாலெல்லாம் திருவள்ளுவர் எளிய வழி சொன்ன வர். அதனையும் விட்டுக் கொடுத்துச் சொன்னவர். அதனையும் . மாற்று வழி காட்டிச் சொன்னவர். இவை போன்றவற்றால் திருக்குறள் தரும் அறிவுரைகள் எளிதிலும் எளிது.