பக்கம்:புதையலும் பேழையும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலப் பின்னணி:

மன நிறைவு முத்திரை.

பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் , பூத்துக்கொண்டிருந்தது. கலைக்கூட முகவாயிற் கோபுரத்தை அமைப்பதுபற்றிய கருத்துரைகள் விரிந்தன; வரைபடங்கள் வந்தன.

'கண்ணகி கோவலன் கலவி, எழுநிலை மாடத்தில் கனிந்தது, கோவலன் மாதவி குலாவல், எழுநிலை மாடத்தில் குனித்தது. எனவே, முகப்பு எழுநிலை மாடமாக முகிழ்ப்பதே முழுப்பொருத்தம்

-என்னும் எனது கருத்து படைக்கப்பட்டது. அந்நாள் முதல்வர் டாக்டர் கலைஞர் எழுதித் தருக என்றார். எழுதித் தந்தேன்; ஏற்றார். எழுநிலை மாடம் எழுந்தது.

ஏற்றமாகத் தோற்றமளித்துக்கொண்டிருக்கும் எழுநிலை மாடம் எழக் கரணியமான கட்டுரை இது. இஃது எனக்கொரு மன நிறைவு முத்திரை; மதர்ப்புச் சித்திரை - எழுநிலைமாடம் சித்திரை நிலவில் திறக்கப்பட்டதன்றோ...!

முத்திரையைப்பதித்த இதழ் :

'தமிழரசு" தி. ஆ. 2003-தை-2; தை-16: மாசி-16

(15–1; 1-2; 1–3–1972)