பக்கம்:புதையலும் பேழையும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழு

மாடம்

குகை முதல் வீடு வரை.

மலைக்குகை மாந்தனது முதல் வீடு. மரக்கிளை அவனது மறு வீடு. கிளைகளில் கழிகளைப் போட்டுப் பரண் கட்டி இடம் அமைத்துக் கொண்டது அவனது முதல் கட்டு + இடம்= கட்டிடம். மேலே மரத்தில் தழைத்து வளர்ந்த தழைகளே அக் கட்டிடத்தின் மேற்கூரை. 'கூர்’ என்பதற்கு மிகுதி என்பது பொருள். தழைகளை மிகுதியாக உடையது "கூரை" எனப்பட்டது உச்சி கூர்மையாகத் தோற்றமளித்ததாலும் கூரை என்பது. பொருத்தமாயிற்று. -

மரத்திலிருந்து நிலத்தில் இறங்கியது அவனது மறு கட்டிடம், மரத்தின் உச்சி தொடங்கித் தழைத்து வளர்ந்த தழை தாழ்ந்து பரவி, மழைக்கும் வெய்யிலுக்கும் காப்பாக அமைந்ததைக் கண்டே தமிழன் கூரை கட்டக் கற்றுக்கொண்டான்.

நிலத்தில் தழைகளால் கூரை கட்டிப் பக்கங்களில் கழிகளை நட்டுச் சுவராக அமைத்து முதல் இல்லம் கண்டான் தமிழன். இத் தழைக் கூரையை, இலக்கியம் உவலைக் கூரை" என்று குறிக்கும். உவலை என்ருல் தழைக்கொத்து. தமிழர் நாகரிகம் அடைந்த காலத்திலும் இந்த உவலைக் கூரை அமைக்கும் பழக்கம்

பே, 8