பக்கம்:புதையலும் பேழையும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 < - புதையலும்

இருந்தது. போருக்குப் படையெடுத்துச் சென்று காட்டுப்பகுதி யில் பாடிவீடு அமைத்துக் கூடாரம் கட்டுவர். அதன் கூரையாகக் காட்டுமரத்துத் தழைகளை வேய்ந்தனர். அதற்குள் வீரர் இரவில் ஒடுங்கி உறங்கினர். இதனை,

"... ... ... ... ... ... கடுங்கண் மறவர்

உவலைசெய் கூரை ஒடுங்க”

-என்று புறப்பொருள் வெண்பாமாலை (வெண்பா 16:) என்னும் இலக்கண நூல் பேசுகிறது.

இதுபோன்று உவலைக் கூரை அமைந்த பாடிவீடுகள் வரிசையாகப் பல அமைந்து தெருவாக விளங்கிற்று. பாடி வீடுகள் எதிர் எதிரில் வரிசையாக ஒழுங்கோடு இருந்தன என்பதை,

"உவலைசெய் கூரை ஒழுகிய (ஒழுங்குபட்ட)தெரு' -என்று முல்லைப்பாட்டு (29) பாடுகிறது. -

'இலையும் தழையும் வேயப்பட்ட கூரை இல்லங்கள் "குரர் பை” எனப் பெயர் பெற்றன. இலைகளால் வேயப்பட்ட குரம்பை"இலைவேய் குரம்பை'2 எனப்பட்டது. பின்னர் புல்வேய் குரம்பையாக வளர்ந்தது. இலையைப் போன்று கூரையாகத் தருப்பைப் புல்லால் வேயப்பட்ட குரம்பை "புல்வேய் தரம்பை” எனப்பட்டது. பெரும்பாணாற்றுப் படை என்னும் நுால் ஒரு "புல்வேய் குரம்பையைப் பின்வருமாறு காட்டுகின்றது:

வெண்மையான வஞ்சிமரக் கொம்புகளையும் காஞ்சி மரக்கொம்புகளையும் கழிகளாகப் பரப்பி, நாணல் தட்டை

களை வரிச்சுக் கம்புகளாக வரிசையில் வைத்துத் தாழை

1. "வேழம் காவல் குரம்பை-பெரும்பாண்:51,

2. "இலைவேய் தரம்பை உழையதட் பள்ளி'-மது. கா: 310.

இலைவே ஆரம்பைத் முனிவர் இருந்தார் -பெரி. திரு. 211

3. "அகலுள் ஆங்கண் கழிமிடைந்து இயற்றிய | - : . ; புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவீர்,-மலை 438,