பக்கம்:புதையலும் பேழையும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - 115

நாரால் கட்டித் தருப்பைப் புல் வேயப்பட்ட தாழ்ந்த வாரியைக் கொண்ட குரம்பை,1

இப் புல்வேய் குரம்பையை அடுத்துத் தினைத்தட்டை வேயப்பட்டதும் குட்டையான கால்களை உடையதுமான'தினைத் தாள் குரம்பை உருவாயிற்று. இக்காலத்தும் தினைத் தட்டை வேயப்பட்ட இல்லங்களைத் தமிழகத்துத் தென்மாவட்டங்களில் காணலாம்.

பின் ஒலைக் குரம்பை பிறந்தது. ஈச்ச ஒலை வேயப்பட்டது. ஈச்சமரத்து ஒலை முள்ளோடு கூர்மையாகத் தோன்றிய கூரை, 'முள்ளம்பன்றியினது முதுகு, போன்று இருந்த 2 தாகப் பெரும் பாணாற்றுப்படை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் உவமை கூறியுள்ளார். ஒலை வகையைச் சேர்ந்தவற்றில் அகலமான மடலை உடைய பனைமட்டை வேயப்பட்டது, பனைமட்டை நீர் கசியாமல் ஒடி வழிய ஏதுவாய் அமைந்தது. பனையோலை வேயும் பழக்கம் இன்றும் பரவலாகவும், பெருவாரியாகவும் இருப்பதைக் காண் கின்றோம்.

அடுத்து, வளமான தென்னையினது பழுத்து வாடிய மடலாம் ஒலையைக் கீற்றாகப் பின்னி வேயும் பழக்கத்தைக் கொண் டனர். இதனை, -

வண்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த ... ... ... ... ... ... ... உழவர்

தனிமனைகள்’ ’

- என்று குறிக்கின்றது.

1. "வேழம் நிரைத்து வெண் கோடு விரை இத்

தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த குறியிறைக் குரம்பை -பெரும்பாண் : 268 - 285.

"இருவி (தினைத்தட்டை) வேய்ந்த குறுங்கால் குரம்பை"

- குறி. பா : 15'

“புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்துளதோர் புலைப்பாடி’

-பெரி. பு: திருநாள்ை: .ே 2 'ஈத்திலை வேய்ந்த எய்ப்(முள்ளம்பன்றி)புறக் குரம்பை

மான்தோல் பள்ளி மகவொடு முடங்கி" -பெரும்பாண்: 88, 89 8 பெரும்பாண் : £58, 855, so. 8 ' '... .