பக்கம்:புதையலும் பேழையும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 புதையலும்

இவ்வாறு குறிஞ்சி மலையில் தொடங்கிய குகைக்கூரை, முல்லைக் காட்டில் இலை, புல், தட்டை வேயப்பட்ட கூரைகளாய் வளர்ந்து, மருத வயலில் தென்னங் கீற்று வேயப்பட்ட கூரை யாயிற்று, . .

பசிய தழைகளால் ஆகிய குரம்பை 'குடில்’ என்றும் உலர்ந்த ஒலைகளால் ஆகிய குரம்பை குடிசை” என்றும் காலப் போக்கில் வழங்கப் பெற்றன.

இக்கூரை வீடுகள் சிற்றில்லங்கள். சற்றுமேட்டு நிலத்தில் அமைந்தவை. அதிலும் திண்ணை அமைப்பிருந்தது. இவற்றை யெல்லாம் அறிவிப்பது போல் சூடாமணி நிகண்டு,

"திட்டையே திண்ணை சிற்றில் கூரையாம்" - - (இடப்பெயர் : 55)

என்கின்றது.

இதற்குமேல், மாந்தர் பொருந்தி வாழ (மன் = பொருந்து தல்) மன் + ஐ = மனை எழுந்தது. இஃது இடம் பெயர்தல் இன்றி நிலைத்த இடம் ஆனமையாலும் (மன் = நிலைத்தல்) மனை ஆயிற்று.

இம்மனை சுடுமண்ணாம் செங்கற்களால் நிலைப்பாய் உயர மாகக் கட்டப்பட்டுச் 'சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனை"களாக (மணிமேகலை: மலர்வனம் புக்க காதை: 127.) வளர்ந்தன.

இவை யாவும், வாழும் இடம் என்னும் பொருளில் இல்லங் கள் ஆயின. மருட்டும் விலங்குகள், மழை, வெய்யில், புறத்தே செய்யும் தொழில் முதலியவற்றினின்றும் விடுவிக்கும் உறையுள் என்னும் பொருளில் வீடுகள் (விடு- விடல்-வீடு) எனப்பட்டன.

மாளிகைவளமனை தோன்றியது.

சுற்றிலும் அடைக்கப்பட்டு வாயிலைக் கொண்டதாய் எழுந்து வளர்ந்த இல்லம் - விடு - மனை பலவகைப் பகுதிகளை உடையதாக வளர்ந்தது. முன் மண் டபம், தெ ற்றி (திண்ணை), கூடம், தாய்க்கட்டு, அடுக்களை என வகை பெற அமைக்கப்பட்டு வானத்தை அளாவியதாக எழுந்தது. உள்ளே