பக்கம்:புதையலும் பேழையும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

பேழையும் - 119

"சிற்ப வல்லுநரால் வெண்சுதையால் செய்யப் பட்டவை. உலகத்து உயிர்களுக்கெல்லாம் உவமை காட்டுவன போல் ஊர்வன முதலாகத் தேவர் வரை பல்வகைப் பிறப்பின் வடிவங்கள் பொம்மைகளாகச் செய்யப்பட்டு அமைக்கப்பட்டவை.'

-இவ்வாறு சாத்தனார் காட்டுகிறார். இன்றும் செட்டிநாட்டில் நகரத்தார் மனைகளின் முகப்பில் இது போன்ற சுதைப் பொம்மைகள் அமைக்கப்பட்டிருப் பதைக் காணலாம்.

மாளிகையின் வாயிற் கதவுகள் பல்வகைத் கலைத் தொழி லோடு மிக உயரமாக, நெய் பூசப்பட்டு, நெடுநிலைக் கதவுகளாக விளங்கின. மாளிகையின் வெளிப்புறம் இத்துணைச் செல்வச் செழிப்பைக் காட்டுவதாக வனப்போடு அமைக்கபட்டதெனின் உள்ளமைப்புகளின் சிறப்பை உணரலாம்.

மாளிகையின் மேற்கூரையாக வளைந்த மண் ஒடுகள் - சுடப் பட்டவை வேயப்பட்டன. உள்ளே காற்று வருவதற்கு இரண்டு மண் ஒடுகளை மாற்றிப் பொருத்தி மானினது கண் போன்று அமைத்தனர். அம் மான்கண், காற்று வரும் வழியாகையால் "மான்கண் காதலர்’ (கால் = காற்று; அதர் = வழி.) எனப்பட்டது

- "மான்கண் காலதர் மாளிகை இடங்கள்' (சிலப்பதிகாரம் : 5 : 8.) காவிரிப்பூம்பட்டினத்தில் பெருகியிருந் தனவாம்.

காலப்போக்கில் ஒடு வேய்ந்த மனை மச்சு என்றும், குடிசை குச்சு' என்றும் வழங்கப்பட்டன.

பரவலாக இடங்கொள்ளும் பாங்கில் மனைகளையும் மாளிகைகளையும் கண்ட தமிழனது உள்ளம் உயரப் போக்கிலும் உயரத் தொடங்கியது. சுடுமண்ணாம் செங்கல் கொண்டு உயரமான தூண்களை அமைத்து அந் நெடுநிலைக் கந்தில்’ (கந்து - தூண்) தெய்வ உருவங்களைப் படைத்தான். அது

1 'மையறு படிவத்து வானவர் முதலா

எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய - கண்கவர் ஓவியம் - மணி : மலர்வனம் : 27 - 130,