பக்கம்:புதையலும் பேழையும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

2

i

பேழையும்

வேயா மாட்மும் வியன்கல இருக்கையும் மான்கண் காலதர் மாளிகை இடங்களும்'

-கொண்டு திகழ்ந்ததாம். இந்த வேயா மாடம் மிக உயரமாய் அமைந்தது. ஏறுவதற்கு ஏணி சார்த்தி ஏற முடியாத அளவு விண்வரை உயரமாய் அமைந்தது.

இவ்வேயா மாடம் களிமண்ணால் ஆகிய பெருங்கற்களால் ஒட்டப்பட்டவை. இதனை '... ... தகு மண்ணிடு மருவிய வேயா மாடம்” என்னும் சூடாமணி நிகண்டு (இடப்பெயர் : 52) கொண்டும் அறியலாம்.

மாளிகை வேறு; மாடம் வேறு. மாளிகை வேயப்பட்டும் வேயப்ப்டாமலும் அமையும் வளமான நல்லில்லம். மாடம் வேயப்படாத ஒட்டுக் கட்டிடம். நம் வீட்டு முன் வாயில் நிலை யில் இரு பக்கங்களிலும் விளக்கு வைப்பதற்காக இரு புரைகள் இருக்கும். அவற்றிற்கு மாடப்புரை என்று பெயர். அவற்றை மாடங்கள் என்றே வழங்குகின்றோம். மேல் வளைவாக ஒன்று கூடும் கட்டிட அமைப்பே மாடம்’ எனப்பட்டது.

அக்காலத்தில் ஒர் ஊரின் சிறப்பு மாடத்தாலும் குறிக்கப் பட்டது. R

'மாடம் ஓங்கிய மல்லல் முதுரர்'

என்றார் நக்கீரர். மாடத்திற்குச்சிறந்த ஊர் மதுரை. இலக்கியங் கள் மதுரையை மாட அடைமொழியுடன் குறிக்கின்றன. -

"மாட மதுரையும் பீடார் உறந்தையும்’-சிலம்பு ; வேனிற். காதை ; 4 'மாட மதுரையும் தருகுவன்' -புறம், 32 ; 5 மாடமலி மறுகிற் கூடல் -திருமுருகு : 71. 'மாடமலி மறுகிற் கூடல் ஆங்கண்' -அகம் : 346 : 20 "நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்' -கலி ; 92:65 "நான்மாடக் கூடல் நகர் -பரி : தி : 6: 4 o 'மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்'- மது. கா : 429. 'நான்மாடக் கூடல்' என்பது மதுரைக்கு ஒரு சிறப்புப் பெயர்.

1. சிலம்பு : இந்திர : 7, 8. 2. நெடு. வா 29