பக்கம்:புதையலும் பேழையும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையலும்

i

2

3

"பிறங்குநிலை மாடத்து உறந்தை' -எனப் பட்டினப் பாலையும் (285)

"யிறங்குநிலை ம்ாடத்து உறந்தை யோனே” -எனப் புறநானூறும் (89) உறையூரை மாடப் பெருமையுடன் சிறப்பிக் கின்றன.

மாடங்கள் பலவகைப்படும்:

வீரர் உறங்கும் மாடம், திரைப்பொருள் கிடக்கும் மாடம், மகளிர் தம் அழகிய அணிகலன்களை வைக்கும் மாடம் முதலியன எங்கும் நிறைந்திருந்தன. இவை இல்லாத இடம் இல்லை என்று சீவக சிந்தாமணி (55) செப்புகின்றது. ஒவ்வொரு மாடமும் முகில் தோய்ந்த குன்று போன்று பல பெருகியிருந்தன என்பதை "மாட ஈட்டகம்” என்று இந்நூல் குறிக்கின்றது.

இம்மாட அமைப்பில் படகுகளும், மிதவைத் தெப்பங்களும் கட்டப்பட்டன. அவை 'நீரணி மாடம்’ என்றும், "மாடப் புணை என்றும் பெயர் பெற்றன.

மாண்புடைய மாடம்.

மாடம் மாண்புள்ள வளமனையாகத் திகழ்ந்தது, மாடம்: என்னும் சொல்லே 'மாண்புடையது' என்னும் பொருளைக் கொண்டது. மாண்’ என்பது அதன் மூலச்சொல். அது மாடுமாடம் - மாடி என வளர்ந்தது.

சேண்’ என்றால் நெடுந்தொலைவு என்னும் தன்மையைக் குறிக்கும். அது சேடு என்றாகி, நெடுந்தொலைவை உடையது, என்னும் எல்லைப் பொருளைக் குறிக்கும். சேடு’, சேடி’ ஆகித் தொலைவில் உள்ள இடம் - நாடு’ (சேடி=விஞ்சையர் நாடு மணிமேகலை 17 : 21) எனப் பொருள்படும். - -

- கோண் = வளைவு; கோடு = வளைவை உடையது. கோடி-வளைந்த பொருள். * - - . . . . . . .

1. நீரணி மாட வாவி நேர்ம்புணை நிறைத்து: சீவ, சி: 254,