பக்கம்:புதையலும் பேழையும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 123

இவை போன்றே,

மாண் - மேம்பட்ட பெருைைம;

மாடு - மேம்பட்ட பெருமையை உடையது;

மாடி - மேல்நிலை இடம். -என்று பொருள் வளர்ந்தது.

'மாடு” என்னும் சொல் பல பொருள்களைத் தருவது. இங்கு இடம், பக்கம், செல்வம், பொன் என்னும் பொருள்கள் நான்கும் இயைந்து நிற்கும் சொல்லாகி மேம்பட்ட நிலையைக் குறிக் கின்றது. .

கூடு - கூடம்; பாடு- பாடம் என்றாவது போல, மாடு - மாடம் என்றாயிற்று. மாடம் என்பது 'மாடு' என்னும் சொல்லில் இயைந்த நான்கு பொருள்களுக்கு ஏற்ப வாழ்வியலுக்கு வளமான இடமாய், மாளிகையின் பக்கமாய், செல்வச்செழிப்பின் சின்னமாய், பொன் பேழையாய்த் திகழ்ந்தது.

இம்மாடம் முன்னே கண்டதுபோன்று ஒருநிலையாகவும் (ஒரு மாடி) மேன்மேல் அடுக்கடுக்காகப் பல நிலைகளாகவும் கட்டப்பட்டது, அக்கால மாடம் மலைபோன்று காட்சி அளித்த தாம். முகில் கூட்டம் படியும் அளவில் உயரமாய் விளங்கிற்றாம்.

'மலையென மழையென மாடம் ஓங்கி"

- மலை : 484. "மலையென மருளும் மகிழ்செய் மாடம்" - - பொருந்: 84.

'மழையாடும் மலையின் நிவந்த மாடமொடு”

- மது. கா : 855.

"வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇ”

-- w. . - பெரும்பாண் : 388 "புயலடையும் மாடங்கள்' - பெரியபுராணம் -

- திருநாளை 5

இவைபோன்றுபல இலக்கியங்களும் மாடத்தின் உயரப் பெரு மையைக் குறிக்கின்றன. மாடத்தில் உயரே ஏறுவதற்கு ஏணிப்படி உயர்த்தி நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கு நகைச்சுவைபட உவமை கூறினார் உருத்திரங்கண் னனார் :