பக்கம்:புதையலும் பேழையும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 புதையலும்

வானம் வீழ்ந்துவிடாமல் ஊன்றி முட்டுக்கொடுத்தது போன்று ஏணி சார்த்தப்பட்டிருந்தது. ஏற அருமையாய், விண்ணைக் குத்துவது போன்று உயர்ந்து வளர்ந்த மாடத் தில் இரவில் ஏற்றப்பட்டுக் கொழுந்துவிட்டு எரியும் விளக்கு, கடலில் வரும் கலங்களை அழைக்கும் கலங்கரை விளக்கமாக இருந்தது.'

- இத்தகைய மிக உயர்ந்த மாட நிழலில் சிற்றுண்டிகள் விற்கப்படுவதை, .

"மாடநிழலில் பண்ணியம் விற்பார்” -என துரைக் காஞ்சி காட்டுகிறது. (405, 406)

இத்தகைய மாடங்கள் வீதியின் இரு மருங்கிலும் அமைந் திருந்தன. வீதி ஆறு போன்றும், பக்கங்களில் அமைந்த மாடங்கள் ஆற்றின் இருகரைகள் போன்றும் தோற்றமளித்தன. - இம்மாடங்களை மாளிகையுடன் கட்டி அமைப்பர். மாடத் துடன் கட்டப்பட்டமாளிகை மாடமாளிகை எனப்பட்டது. மாளிகை யின் முன்னரும், மருங்கிலும், உட்புறத்தும் மாடம் கட்டப்பட்டது. மாளிகையின் வாயில் கோபுரம் போன்றும் அமைக்கப்படும், அம் முகப்பை மாடமாகவும் அமைத்தனர்.

இதனை,

'கோபுரமின்றி வாசலை மாடமாகவும் அமைத்தலின் மாடம் என்றார்: 2 - என மதுரைக்காஞ்சியின் உரை யில் நச்சினார்க்கினியர் விளக்கிக் கூறினார்.

கன்னிப் பெண்கள் உறையும் மாடம் கன்னி மாடம்" 3 எனப்பட்டது. இதனைத் திருத்தக்க தேவர் "தன்னக மாடம்"

1 'வானம் ஊன்றிய மதலை போல . ஏணி சாத்திய ஏற்றரும் சென்னி

வான்பொர நிவந்த வ்ேயா மாடத்து இரவின் மாட்டிய இலங்குசுடா ஞெகிழி உசல அமுவத்து ஒருகலங் க்ர்ையும்: -

- - பெரும்பாண் 846 - 850.

2. மது. கா: 855 உரை. , 8 காவலன் நெஞ்ச மென்னும் கன்னிமாடம் புகுந்து” ۶ . : ۰ - ۰ .۱

- - - . هي سنت s, 744 : يق